AAP Manifesto Kejriwal ki Guarantee Updates: பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்களன்று "கெஜ்ரிவால் கி கியாரண்டி" என்ற தலைப்பில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதுக்குறித்து முழு விவரங்களை பார்ப்போம்.
15 அம்ச வாக்குறுதி "கெஜ்ரிவால் உத்தரவாதங்கள்"
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாவரி 27, திங்கள்கிழமை), வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்ற உள்ள "கெஜ்ரிவால் உத்தரவாதங்கள்" என 15 அம்ச வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் விவரம்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5, 2025 அன்று நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8 அன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லியை பொறுத்த வரை ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை முழு விவரம்
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை உத்தரவாதங்களை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், "முதலில் வேலைவாய்ப்பு உத்தரவாதம், இரண்டாவது பெண்களுக்கு உத்தரவாதம், மூன்றாவது மருத்துவ சிகிச்சைக்கான சஞ்சீவனி திட்டம். நான்காவது மின் நுகர்வு உத்தரவாதம், ஐந்தாவது உத்தரவாதமாக பழைய தண்ணீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், ஆறாவது உத்தரவாதமாக சர்வதேச பல்கலைக்கழகத்தில் படிக்க தலித் மாணவர்களுக்கான செலவுகள் என தங்கள் கட்சியின் உத்தரவாதங்கள் குறித்து பேசினார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த 15 வாக்குறுதிகள் விவரம்
1. வேலைவாய்ப்பு உத்தரவாதம்: வேலையின்மையை சமாளிக்கவும், படித்த மற்றும் திறமையான குழுவின் தலைமையில் வேலைவாய்ப்பை வழங்கவும் திட்டம் உருவாக்கப்படும்.
2. மகிளா சம்மன் யோஜனா: டெல்லியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதத்திற்கு ரூ.2,100 நிதி உதவி
3. சஞ்சீவனி யோஜனா திட்டம்: சரியான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்காக சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துதல்.
4. பழைய தண்ணீர் பில் கட்டணங்களை தள்ளுபடி: கடந்த காலத்தில் இருந்த முறையற்ற தண்ணீர் பில்களை சரிசெய்தல். மற்றும் தண்ணீருக்கான பூஜ்ஜிய பில் கொள்கையை மீட்டமைத்தல் மற்றும் வீடுகளுக்கு 24 மணி நேர தண்ணீர் வழங்குதல்.
5. யமுனை சுத்தம் செய்தல் மற்றும் சாலைகள்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் யமுனை நதியை சுத்தம் செய்து உயர்தர ஐரோப்பிய பாணி சாலைகளை உருவாக்குவதற்கான உறுதி.
6. அண்ணல் அம்பேத்கர் உதவித்தொகை திட்டம்: நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு தலித் மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, சர்வதேச பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் தலித் மாணவர்களின் கல்வி, பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஈடுகட்ட அம்பேத்கர் உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
7. மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் / 50% கட்டணச் சலுகை: டெல்லியில் படிக்கும் அனைத்து பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் மற்றும் டெல்லி மெட்ரோவில் 50% தள்ளுபடி வழங்கப்படும்.
8. பூஜாரி-கிராந்தி சம்மன் ராசி திட்டம்: கோயில் மற்றும் குருத்வாரா பூசாரிகளுக்கு மாதத்திற்கு ரூ.18,000 கௌரவத் தொகை வழங்குவோம்
9. குத்தகைதாரர்களுக்கான இலவச திட்டம்: டெல்லியில் குத்தகைதாரர்களுக்கு இலவச நீர் மற்றும் மின்சாரத் திட்டங்களை விரிவுபடுத்துதல்.
10. கழிவுநீர் பழுது மற்றும் விரிவாக்கம்: அடைபட்ட கழிவுநீர் கால்வாய்களை 15 நாட்களுக்குள் உடனடியாக சரிசெய்தல் மற்றும் அவை இல்லாத பகுதிகளில் புதிய கழிவுநீர் இணைப்புகள் போடுதல்
11. இலவச ரேஷன் திட்டம்: தேவைப்படுபவர்களுக்கு இலவச ரேஷன்களைத் தொடர்ந்து வழங்கப்படும்
12. ஆட்டோ/இ-ரிக்ஷா ஓட்டுநர்களுக்கான திருமண உதவி: ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி.
13. ஓட்டுநர்களுக்கான ஆயுள் காப்பீடு: ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டுத் தொகை. அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடும் வழங்கப்படும்.
14. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்: டெல்லியில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வது பாஜக அரசின் பொறுப்பாகும். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் தெருவிளக்குகளை நாங்கள் நிறுவியுள்ளோம். இதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், டெல்லி அரசு தனியார் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு (RWAs) நிதி உதவி.
15. தற்போதுள்ள இலவசத் திட்டங்களைத் தொடர்தல்: இலவச கல்வி, மின்சாரம், தண்ணீர், மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற 6 உத்தரவாதங்கள் முன்பு போலவே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - ரூ. 171 கோடி மதிப்புள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு! வெளியான புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ