புதுவையில் COVID-19-க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5-ஆக குறைப்பு...

புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : May 15, 2020, 07:05 PM IST
புதுவையில் COVID-19-க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5-ஆக குறைப்பு... title=

புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் 16 பேர் இதுவரை கொரோனாவுக்கு சாதகமான சோதனை முடிவு பெற்றிருந்த நிலையில் தற்போது இவர்களில் 11 குணமடைந்து வீடு திரும்பியதாகவும், மீதம் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது., "புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே நோய் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.  #கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் இன்னும் சில காலம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் ஆக உள்ளது. இது இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும்.

நான் மத்திய அமைச்சராக இருந்து பெற்றுவரும் ஓய்வூதியத்தில் இருந்து 30 சதவீதத்தை மாநில அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளேன். இதேபோல் பலர் முன்வந்து விட்டுக்கொடுத்தால் மாநில அரசுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அண்டை மாநிலங்களில் முன்கண்ட பணியாளர்களை தவிர்த்து மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதேபோன்று #புதுச்சேரியில் செய்வது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

நேற்று மாகே பகுதியை சேர்ந்த 23 மாணவர்கள் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 23 மாணவர்கள் அனைவரையும், முதல்வர் நிவாரண நிதி மூலம்  அவர்களுடைய சொந்த ஊரான கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார். மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குகிறார்கள் இவை தவிர நிதி ஆதாரங்களை தருவதாக அறிவிக்கவில்லை." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News