டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததாக முதியவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 20, 2022, 12:10 AM IST
  • முதியவர் மீது ஆசிட் வீச்சு.
  • டிவியில் அதிக சத்தம் வைத்ததால் விபரீதம்.
  • போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு title=

கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70) .இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தாமரை மேலே நீர்த்துளி போல்... இளையராஜா மீது ஏன் வரம்பு மீறிய தாக்குதல்?

இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து சம்பத்  முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதை அடுத்து சம்பத் அலறி துடித்துள்ளார். இதில் அவரது முகத்தில் வாய் மற்றும் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | இளையராஜா கருத்தை ஏன் சில்லறைத்தன அரசியலுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?- நடிகை கஸ்தூரி காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News