’மெர்சல்’ கெட்டப்பில் வேட்புமனு தாக்கலுக்கு வந்த விஜய் ரசிகர்..!

மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் விஜயாகவே மாறி, சைக்கிளில் ஊர்வலமாக சென்றது காண்போரின் கவனத்தை ஈர்த்தது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 4, 2022, 07:51 PM IST
  • மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி
  • ஊர்வலத்தில் மெர்சல் கெட்டப்பில் வந்த ரசிகர்
  • பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்
’மெர்சல்’ கெட்டப்பில் வேட்புமனு தாக்கலுக்கு வந்த விஜய் ரசிகர்..! title=

தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. மதுரையிலும் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று மதுரை அனுப்பானடி பகுதியில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு ஆதரவாக, ரசிகர் ஒருவர் விஜயாகவே மாறி, வேட்பு மனுதாக்கல் செய்ய சென்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரபல பாடகர் கானா பாலா போட்டி

அனுப்பானடி வார்டு பெண்ள் போட்டியிடும் தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகள் இருக்கும் மதுரை மாநகராட்சியில் அனுப்பானடி வார்டில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கம் களம் காண்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருக்கும் நாகேஸ்வரி என்பவர், அனுப்பானடி வார்டில், போட்டியிடுகிறார்.

ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 699 மூத்த அதிகாரிகள் நியமனம்!

இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற அவருக்கு, ஆதரவாக விஜய் ரசிகர்கள் உடன் வந்தனர். அப்போது, விஜய் ரசிகர் ஒருவர், மெர்சல் படத்தில் வரும் விஜயைப்போன்று தன்னை மாற்றிக்கொண்டு சைக்கிளில் ஊர்வலமாக வேட்பாளருடன் வந்தார். மேல, தாளங்கள் முழங்க அழைத்துச் செல்லப்பட்ட நாகேஸ்வரி, விஜய் ரசிகர்கள் ஆதரவுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். விஜயாக மாறி சைக்கிளில் வந்த ரசிகர் அங்கிருநவர்களிடம் மட்டுமல்லாது, இணையத்திலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News