10th ரிசல்ட்!! தேர்வு முடிவுகள் எதில் பார்ப்பது?

தமிழகத்தில் SSLC (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவு புதன்கிழமை (நாள் 23) காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2018, 08:34 PM IST
10th ரிசல்ட்!! தேர்வு முடிவுகள் எதில் பார்ப்பது?  title=

தமிழகத்தில் SSLC (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாள் 23) காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு எனப்படும் SSLC பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். மேலும் தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.

SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 
இதையடுத்து SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

10-ம் வகுப்பு எனப்படும் SSLC பொதுத்தேர்வு முடிவு எதில் பார்ப்பது!

 

SSLC தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகும். இவற்றை, www.tnresults.nic.inwww.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம். 
தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.
தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.

 

Trending News