யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்!

ஐபிஎல் ஏலம் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக பெங்களூரில் நடந்து முடிந்தது.  

Written by - RK Spark | Last Updated : Feb 14, 2022, 01:27 PM IST
  • அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன்
  • 'காவியா மாறன் யார்', 'எஸ்ஆர்எச் உரிமையாளர் யார்' போன்ற கேள்விகளால் சமூக வலைதளங்கள் தேடப்பட்டு உள்ளன.
யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்! title=

2022 ஐபிஎல் ஏலத்தில் அணி உரிமையாளர்களின் அடுத்த தலைமுறையினர் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆர்யன் கான், சுஹானா கான் மற்றும் ஜாஹ்னவி மேத்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைராகி வருகிறது. ஷாருக்கானிநிற்கு பதிலாக அவரது மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் ஆகியோர் பங்கேற்றனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் கலந்து கொண்டார்.  தற்போது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.  ​​​ஏல மேசையில் காவியா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூகுள் தேடல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் 'யார் காவியா மாறன்' மற்றும் 'எஸ்ஆர்ஹெச் உரிமையாளர் யார்' போன்ற கேள்விகள் தேடப்பட்டு உள்ளன.

kaviya

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்

30 வயதான காவியா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இயக்குனர் டாம் மூடி மற்றும் முத்தையா முரளிதரனுடன் ஏலத்தில் கலந்து கொண்டார். எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன், மீடியா அதிபர் கலாநிதி மாறனின் மகள் ஆவார். அவர் சன் மியூசிக் மற்றும் இதர சன் நிறுவனத்தின் சேனல்களை பார்த்து வருகிறார்.  காவியா ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், SRHன் ஐபிஎல் போட்டிகளின் போது அவர் முதன்முதலில் காணப்பட்டார். ​​அப்போதே ட்ரெண்டிங்கில் இருந்தார் காவியா. 2019 ஏலத்தின் போது காவியா உடனிருந்தார். 

 

 

 

அணி: கேன் வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரன், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால், ஜே சுசித், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ரோமரியோ ஷெஃபர்ட், ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், சவுரப் துபே, விஷ்ணு வினோத், க்ளென் பிலிப்ஸ், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: 

கேன் வில்லியம்சன் (ரூ 14 கோடி)

அப்துல் சமத் (ரூ 4 கோடி)

உம்ரான் மாலிக் (ரூ 4 கோடி)

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News