India Squad for Sri Lanka Tour: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, பிசிசிஐயுடன் கலந்தாலோசித்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்றும், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் முடிவு செய்துள்ளது.
கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்க தேர்வுக் குழு தயக்கம்
ஹர்திக் பாண்டியாவின் கடந்தகால செயல்திறன் மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பது குறித்து தேர்வாளர்கள் உறுதியாக இல்லாததால், டி20 சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
கேப்டனாக தொடர வேண்டுமா? சூர்யகுமாருக்கு நிபந்தனை
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் இந்தமுறை அணியை வழிநடத்தும் சூர்யகுமாரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாமலும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமலும் இருந்தால், எதிர்காலத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க தயாராக இருப்பதாக பிசிசிஐக்கு தேர்வுக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை சூர்யகுமார் வழிநடத்த வேண்டும் என பிசிசிஐ தற்போது திட்டமிட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அதிகாரிகள் பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை
டி20 உலகக் கோப்பை 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் பாண்டியா தான் முன்னோடியாகத் தோன்றினாலும், பிசிசிஐ அதிகாரிகளும், தேர்வாளர்களும் பாண்டியாவிடம் பேசி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டங்களைக் கூறியதாகத் தெரிகிறது. சூர்யகுமாருக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கபடுகிறது என்பதையும் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளனர்.
கௌதம் கம்பீரின் முதல் தொடர் - மூத்த வீரர்களுக்கு அழைப்பு
இதற்கிடையில், பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் முதல் தொடர் இது என்பதால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை அணியின் மூத்த வீரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும், பாண்டியா டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெற மாட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்ய வேண்டாம் என மூத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு இந்திய அணிகளிலும் ரிஷப் பந்த் இடம்பெறுவார்.
இந்திய ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு
ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிசிசிஐ ஐயர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது மற்றும் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து அவரது பெயரை நீக்கியது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பி உள்ளத்தால், விரைவில் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம் பெறுவார்.
ஆல்ரவுண்டர் சிவம் துபே வாய்ப்பு உறுதி
இரு அணிகளிலும் (டி20 மற்றும் ஒருநாள்) மும்பை ஆல்ரவுண்டர் சிவம் துபே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பாண்டியா ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால், இவரின் இடம் உறுதி எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க - சுப்மன் கில் கேப்டனாக இருக்க தகுதியே இல்லாத பையன் - அமித் மிஸ்ரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ