நாளைய இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு இருக்குமா?

நாளை நடிக்கவிருக்கும் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்குமா? இருக்காதா? என்ன சொல்கிறது வானிலை என்று பார்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2019, 07:49 PM IST
நாளைய இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு இருக்குமா? title=

சவுத்தாம்டன்: இங்கிலாந்து: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. 

இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நாளை நடைபெற உள்ள 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. நாளை போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில், அடுத்த சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு ஏற்ப்படும். 

இந்த சூழ்நிலை நாளை நடிக்கவிருக்கும் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்குமா? இருக்காதா? என்ன சொல்கிறது வானிலை என்று பார்போம்.

ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணையில் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் இந்திய அணி நாளை (ஜூன் 22) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது. இந்த ஆட்டம் சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. அப்படி மழை பெய்தாலும் காலை நேரத்தில் பெய்யலாம். மற்றப்படி ஆட்டத்தை பாதிக்கும் வகையில் மழை இருக்காது எனக் கூறியுள்ளனர். 

இதன் அடிப்படையில் நாளை நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி எந்தவித தடையின்றி நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிகிறது.

Trending News