AsiaCup2018: மீண்டும் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா...!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2018, 08:39 AM IST
AsiaCup2018: மீண்டும் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா...! title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். போட்டியின் இறுதியில் 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்தது.  இதனால் இந்திய அணி வெற்றி பெற 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  ரோகித் ஷர்மா 119 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 39.3 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

Trending News