கபில்தேவுக்கு காரசாரமான பதிலடி கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா

20 ஓவர் இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் எனக் கூறிய இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில்தேவுக்கு, கேப்டன் ரோகித் சர்மா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2022, 01:42 PM IST
  • கவலையளிக்கும் விராட் கோலி பார்ம்
  • கடும் விமர்சனம் செய்த கபில்தேவ்
  • காரசாரமாக பதிலடி கொடுத்த ரோகித் சர்மா
கபில்தேவுக்கு காரசாரமான பதிலடி கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா title=

மோசமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார். கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து அவர் பேசும்போது, டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 2 பவுலராக இருக்கும் அஸ்வினை நீங்கள் நீக்கும்போது, பார்ம் இல்லாமல் தவிக்கும் நம்பர் 1 பேட்ஸ்மேனையும் நீக்குவதற்கு தயங்கக்கூடாது. நீங்கள் பெரிய பிளேயராக இருக்கிறீர்கள் என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக மோசமாக விளையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் படிக்க | விராட் கோலி ரன்கள் அடிக்காததற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணமா?

இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என கபில்தேவ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் குறித்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா காரசாரமாக பதிலடி கொடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, விமர்சனம் வைப்பவர்கள் விளையாட்டை வெளியில் இருந்து பார்க்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எங்களிடம் ஒரு இலக்கு உள்ளது. சிறந்த அணியை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறோம். வெளியில் இருப்பவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாது. வெளியில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அணிக்குள் என்ன சூழல் இருக்கிறது என்பது தான் முக்கியம். 

 

விராட் கோலி பார்ம் குறித்து பேசும்போது, அனைத்து வீரர்களும் விளையாட்டில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் ஒரு வீரரின் திறமை என்பது பாதிக்கப்படாது. ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடும் போது, ​​ஒன்றிரண்டு மோசமான தொடர்கள் அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால பங்களிப்பை நாம் புறக்கணிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News