டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக நேற்று (செப். 15) அறிவித்தார். 41 வயதான அவர், தனது உடல் ஒத்துழைக்க மறுக்கும் காரணத்தால், டென்னிஸ் வாழ்வுக்கு முழுக்குப்போடுவாத தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்ட நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
"அதிர்ஷ்டவசமாக, நான் பல்வேறு சிறப்பு வாய்ந்த போட்டிகளை விளையாடி இருக்கிறேன். நிச்சயம் அவற்றை நான் மறக்க மாட்டேன்" தனது டென்னிஸ் வாழ்வு குறித்தும் அதில் மனம் திறந்திறுத்துள்ளார். மேலும், அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் லேவர் கோப்பையுடன் தனது டென்னிஸ் வாழ்வை நிறைவு செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர், மிகவும் ஸ்டைலிஷான டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
இந்நிலையில், ரோஜர் பெடரரின் சக போட்டியாளரும், ஸ்பெயின் வீரருமான ரஃபேல் நடால், பெடரரின் ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்," எனது அருமை நண்பரும், போட்டியாளருமான பெடரர், இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன். இந்த நாள் எனக்கும், விளையாட்டிற்கும் மிகுந்த சோகமான தினமாகும். இத்தனை ஆண்டுகளாக களத்திலும், களத்திற்கு வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில், மகிழ்ச்சி மற்றும் பெருமை என்பதை தாண்டி, அதனை எனக்கான மிகப்பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்" என மனம் உருக தெரிவித்துள்ளார்.
We will have many more moments to share together in the future, there are still lots of things to do together, we know that.
For now, I truly wish you all the happiness with your wife, Mirka, your kids, your family and enjoy what’s ahead of you. I’ll see you in London @LaverCup— Rafa Nadal (@RafaelNadal) September 15, 2022
மேலும்,"எதிர்காலத்தில் நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள இன்னும் பல தருணங்கள் இருக்கிறது, ஒன்றாக இணைந்து செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, அது நமக்கும் தெரியும். இப்போதைக்கு, உங்கள் மனைவி மிர்கா, உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எதிர்வருவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். நான் உங்களை லண்டனில் சந்திக்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெடரர் vs நடால்
நடால், பெடரர் ஆகியோர் இருவரும் 40 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், 24 போட்டிகளை நடாலும், 16 போட்டிகளை பெடரரும் வென்றுள்ளனர். அதில், 24 இறுதிப்போட்டிகளும் அடக்கம். இறுதிப்போட்டிகளில் நடால் 14 போட்டிகளையும், பெடடர் 10 போட்டிகளையும் வென்றுள்ளனர். குறிப்பாக,2005ஆம் ஆண்டின் பிரஞ்சு ஓபன் தொடரில், நடால் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபோது, அரையிறுதியில் பெடரரை வீழ்த்தியே இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் லண்டனில் நடைபெற இருக்கும், லேவர் கோப்பையில் பெடடர் மட்டுமின்றி அவரது சக போட்டியாளர்களான
ஜோகோவிச், ஆண்டி முர்ரே, ரஃபேல் நடால் ஆகியோர் அனைவரும் ஐரோப்பிய அணியின் கீழ், ஒன்றாக விளையாட உள்ளனர். லேவர் கோப்பை என்பது ஐரோப்பிய அணியும், உலக அணியும் மோதிக்கொள்ளும் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேவர் கோப்பை அணிகளின் விவரம்
ஐரோப்பிய அணி: ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரஃபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (நார்வே), ஆண்டி முர்ரே (இங்கிலாந்து), காஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)
உலக அணி: ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா), டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா), டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), அலெக்ஸ் டி மினார்
(ஆஸ்திரேலியா), பிரான்ஸ் டியாஃபோ (அமெரிக்கா), ஜாக் சாக் (அமெரிக்கா).
மேலும் படிக்க | சென்னை ஓபனில் தோல்வியடைந்தார் கர்மன் தண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ