ஒரு போட்டியில் மூன்று சாதனை; கூல் கேப்டன் தோனி அபாரம்...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று சாதனைகளை வரலாற்றில் எழுதியுள்ளார் மகேந்திர சிங் தோனி!

Written by - Mukesh M | Last Updated : Jul 9, 2019, 04:39 PM IST
ஒரு போட்டியில் மூன்று சாதனை; கூல் கேப்டன் தோனி அபாரம்... title=

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று சாதனைகளை வரலாற்றில் எழுதியுள்ளார் மகேந்திர சிங் தோனி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரை இறுதி போட்டி இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இப்போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் பங்கேற்றுள்ளதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி 3 சாதனைகளை படைத்துள்ளார்.

அதாவது இன்றைய போட்டி மகேந்திர சிங் தோனிக்கு 350-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதன் மூலம் 350 போட்டிகளில் (இந்தியாவிற்காக 347 போட்டி + ஆசியா XI அணிக்காக 3 போட்டி) விளையாடிய இரண்டாவது இந்தியர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

உலக அணிகள் பொறுத்தவரையில் தோனி 10-ஆம் இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (463), மஹேலா ஜெயவர்தனே (448), சனத் ஜெயசூர்யா (445), குமார சங்கரகாரா (404), ஷாயித் அப்ரிடி (398), இன்சமாம் உல் ஹக் (378), ரிக்கி பாண்டிங்(375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளி தரன் (350) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் ஒரு சிறப்பாக தான் விளையாடிய 350 போட்டிகளிலும் தோனி விக்கெட் கீப்பராகவே செயல்பட்டுள்ளார். இதன் மூலம் 350 போட்டிகளிலும் கீப்பாராக பங்கேற்ற முதல் வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இலங்கை வீரர் குமார சங்கரகாரா 360 போட்டிகளில் கீப்பாரக செயல்பட்ட போதிலும், 44 போட்டிகளில் கீப்பிங் தவிர்த்து ஸ்பெஸலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

அதேவேளையில் தான் விளையாடிய 350 போட்டிகளில் தோனி 200 போட்டிகளில் தனது அணிக்கு தலைவராக விளையாடியுள்ளார் என்பது மேலும் ஒரு சிறப்பு.

Trending News