ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் யாக்கர் மன்னன்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், நேற்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Last Updated : Jul 27, 2019, 03:02 PM IST
ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் யாக்கர் மன்னன்! title=

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், நேற்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னதால மலிங்கா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியுடன் அவருக்கு இலங்கை வீரர்கள் பிரியா விடை அளித்தனர். இப்போட்டியில் மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்படத்தக்கது. 

யாக்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இலங்கையின் பந்துவீச்சாளர் லஷித் மலிங்கா கடந்த 2004-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 226 போட்டிகளில் விளையாடிய மலிங்கா 338 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். 

முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், நேற்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அபாரமாக ஆடி 91 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது. மலிங்கா 3 விக்கெட்டுகள வீழ்த்தினார். போட்டி முடிந்ததும் மலிங்காவுக்கு வீரர்கள் மரியாதை செலுத்தி விடைபெற்றனர். தனது கடைசி போட்டியில் வெற்றியுடன் விடைபெற்றுக் கொண்டார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் டி-20 போட்டிகளில் தொடந்து மலிங்கா விளையாடுவார் என தெரிகிறது.

மலிங்கா ஓய்வு பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் உட்பல பல மூத்த வீரர்களும் ட்வீட் செய்துள்ளார்கள்.

Trending News