பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக நியமனம்

இந்த வருட ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமனம்.

Last Updated : Feb 26, 2018, 03:54 PM IST
பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக நியமனம்  title=

வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே மாதம் 27-ம் தேதி வரை ஐ.பி.எல் 11_வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் நடந்து முடிந்தது. தமிழக வீரர் அஸ்வினை நடிகை பிரித்தி ஜிந்தா சக உரிமையாளராக உள்ள பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அவரை தக்கவைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்ச்சி செய்தது. ஆனால் ஏலம் அதிக தொகைக்கு போனதால் பஞ்சாப் அணி அஸ்வினை கைபற்றியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

அஸ்வினை ரூ 7.6 கோடி விலை கொடுத்துக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் யுவராஜ்சிங் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இருந்தாலும் யாரை கேப்டனாக நியமிப்பது என்ற தெளிவு இல்லாமல் அணி உரிமையாளர்கள் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழக வீரர் அஸ்வினை கேப்டனாக நியமித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

 

Trending News