கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது

PBKS Lost By 5 Wickets: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்றுப் போனது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2023, 11:56 PM IST
  • இந்தியன் பிரீமியர் லீக் 53வது போட்டி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
  • பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது title=

இந்தியன் பிரீமியர் லீக் இன் 53வது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த சீசனில் இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில், கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்றுப் போனது.

இதற்கு முன்னதாக இந்த இரு அணிகலுக்கும் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்தத் தோல்விக்கு பிறகு, இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியுடன் மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை பதிவு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பிபிகேஎஸ் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் செய்ய, அவரது அணி முதல் இன்னிங்சில் 179 ரன்கள் எடுத்தது. 

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே வீரர்களிடம் கோலி குறித்து பேசிய தோனி! வைரலாகும் வீடியோ!

பாலிவுட் நட்சத்திரமான ப்ரீத்தி ஜிந்தாவுக்குச் சொந்தமான பிபிகேஎஸ் தற்போது 10 புள்ளிகளுடன் உள்ள நான்கு அணிகளில் ஒன்றாகும், மேலும் ஷாருக்கானுக்குச் சொந்தமான KKR ஐ எதிர்த்து வெற்றி பெறுவது ஐபிஎல் 2023 பிளேஆஃப்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளுக்கு முக்கியமானதாக இருந்த நிலையில், தற்போது அந்த அணி கொல்கத்த அணியின் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது.

மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்

ஷிகர் தவான் கேப்டன்

வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் கூர்மையான பந்துவீச்சு இருந்தபோதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது,

47 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 57 ரன்கள் எடுத்ததோடு, தவான் நான்காவது விக்கெட்டுக்கு ஜிதேஷ் சர்மா (21) உடன் 53 ரன்கள் சேர்த்தார். கடைசியில் ஷாருக் கான் (8 பந்துகளில் 21 நாட் அவுட்), ஹர்பிரீத் பிரார் (9 பந்துகளில் 17 நாட் அவுட்), ரிஷி தவான் (11 பந்துகளில் 19 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 180 ரன்களை நெருங்கினர்.

கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 

டாஸ் வென்ற தவான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதே சமயம் ஹர்ஷித் 33 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் அணியை சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய பார்ட்னர்ஷிப் உருவாவதைத் தடுத்தது.

மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News