IPL 2019: சம பலத்துடன் உள்ள மும்பை மற்றும் டெல்லி இன்று மோதல்..

ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2019, 06:14 PM IST
IPL 2019: சம பலத்துடன் உள்ள மும்பை மற்றும் டெல்லி இன்று மோதல்.. title=

புது டெல்லி: இன்று இரவு 8 மணிக்கு தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு லீக் ஆட்டத்தில் விளையாடி ஐந்து போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியையும்  சந்தித்து உள்ளது. பத்து புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாது இடத்தில் உள்ளது. அதேபோல எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் ஐந்து போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.  பத்து புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்து இடத்தில் உள்ளது. 

கடைசியாக டெல்லி அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ளது. ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றுள்ளது.

மும்பை அணியை பொருத்த வரை கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணியிடம் தோற்றுள்ளதால், இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்க ரோஹித் தலைமையிலான மும்பை அணி உத்தவேகத்துடன் களம் காணும்.

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ள இரண்டு அணிகளும் மோத உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

டெல்லி அணி: ஷிகர் தவான், ப்ரிதீவ் ஷா, காலின் முன்ரோ, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கிரிஸ் மோரிஸ், அக்‌ஷர் பட்டேல், கீமோ பவுல், காகிஷோ ரபாடா, அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா.

மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), குவிண்டன் டிக் காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, ஜேசன் பெஹ்னட்ரூஃப், ராகுல் சாஹர், லசீத் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Trending News