மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
மேற்கிந்தியா சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து மேற்கிந்திய தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் கேம்பெள் 0(2), மற்றும் எவின் லிவிஸ் 0(4) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 20(16) ரன்கள் குவித்தார். மறு முனையில் கிரன் பொல்லார்ட் நிதானமாக விளையாடி 49(49) ரன்கள் குவித்தார்.
A six from Sundar to finish the proceedings. We win the 1st T20 WIvIND pic.twitter.com/y3SKQ82Qmj
— BCCI (@BCCI) August 3, 2019
எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீர்ரகள் களமிறங்கினர்.
துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷம்ரா 24(25) ரன்கள் குவித்து வெளியேற, இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணி தலைவர் விராட் கோலி 19(29), மனிஷ் பாண்டே 19(14) என அணிக்கு தேவையான ரன்களை குவிக்க, ஆட்டத்தின் 17.2-வது பந்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.