T20 World Cup: மேட்சுக்கு முன்னால் செக்ஸ் வச்சிக்கோங்க - வைரலாகும் மருத்துவரின் அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மேட்சுக்கு முன்னால் வீரர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் அறிவுரை கூறியிருப்பது வைரலாகி வருகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 08:56 AM IST
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
  • விநோதமான அறிவுரை கூறிய மருத்துவர்
  • இணையத்தில் வைரலாகியுள்ளது
T20 World Cup: மேட்சுக்கு முன்னால் செக்ஸ் வச்சிக்கோங்க - வைரலாகும் மருத்துவரின் அறிவுரை title=

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் உலக கோப்பையில் மோத தயராக உள்ளன. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இப்போட்டியை சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் நேரில் கண்டுகளிக்க காத்திருக்கின்றனர். ஆசிய கோப்பை தோல்வி, கடந்த 20 ஓவர் உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்விகளுக்கு இந்திய அணி, சரியான பதிலடியை பாகிஸ்தான் அணிக்கு கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மாவும், இந்திய அணி அனைத்து விதமான சூழல்களுக்கும் தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் மெல்போர்ன் மைதானத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் போட்டில் இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லை!

இது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும், குறுகிய ஓவர் கொண்ட போட்டியாவது நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மாவும், குறுகிய ஓவர் போட்டி நடைபெற்றால் கூட அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு இந்திய அணி தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு வீரர்கள் தங்கள் துணைகளுடன் செக்ஸில் ஈடுபட்டால், மன ரீதியாக நல்ல புத்துணர்ச்சியை வீரர்கள் எட்டுவார்கள் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரகாஷ் கோத்தாரி என்ற மருத்துவர் பேசும்போது, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் உலக கோப்பையில் மோத இருக்கின்றனர். பரபரப்புக்கும், பெரிய எதிர்பார்க்கும் இடையே நடைபெறும் போட்டியில் வீரர்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். அதற்காக செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பாலியல் வல்லுநர் வார்டெல் பொமராய், தங்கப்பதக்கம் வென்ற சில விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் போட்டிக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொண்டதை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஆய்வு எந்தளவுக்கு உண்மை என்று மற்றொரு மருத்துவர் சஞ்சய் பாண்டே என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணியினர் துணைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ளட்டும் என அறிவுறுத்தியதாக அப்போது மன நல ஆலோசகராக இருந்த பாடி அப்டன் தன்னுடைய சுயசரிதை புக்கில் கூறியிருக்கிறார். ஆனால், அப்போது பயிற்சியாளராக இருந்த கேரிகிரிஸ்டன் மறுத்ததையும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News