India vs Australia 3rd ODI: விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு, இன்று சென்னையில் நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி சிந்திக்க நிறைய இருக்கிறது. 39 ஓவர்கள் (234 பந்துகள்) மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், மீதமுள்ள பந்துகளின் அடிப்படையில் இது இந்தியாவின் மிகப்பெரிய ஒருநாள் தோல்வியாகும். மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023க்கு பிறகு தோனியின் பிளான் இதுதான்! போட்டுடைத்த சிஎஸ்கே வீரர்!
இந்திய அணியில் பெரிய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை, ஆனால் அணி நிர்வாகம் சிறிய மாற்றங்களை செய்ய விரும்புகிறது. அக்சர் படேலுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற வாய்ப்புள்ளது. பேட்டிங் வரிசையில், ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது, ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ் 6வது இடத்தில் களமிறங்கலாம். மறுபுறம், ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது, இதனால் மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அணியில் இடம் பெற வாய்பில்லை. சூர்குமார் யாதவின் ஃபார்ம் சரிவு இந்திய அணிக்கு பெரும் கவலையாக உள்ளது. வழக்கமான 4-வது இடத்தில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், சூர்யா ரன்களைப் பெறுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சூர்யா அடுத்தடுத்து முதல் பந்தில் ஆட்டமிழந்தார். டி20களில் முதன்மை வீரரான சூர்யகுமாருக்கு ODI இன்னும் எடுபடவில்லை. அவரது முதல் ஆறு ODI-களில், அவர் ஒரு 40 மற்றும் இரண்டு ஆட்டமிழக்காத 30 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். தனது கடைசி 10 ODIகளில் 9, 8, 4, 34, 6, 4, 31, 14, 0 மற்றும் 0 என்ற ஸ்கோரைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக இந்தியா ஹர்திக் பாண்டியாவை 4-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவை 6-வது இடத்திலும் களமிறக்கலாம். பாண்டியா ஐபிஎல் போட்டியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்து 487 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6வது இடம் சூர்யாவின் பேட்டிங்கிற்கு மிகவும் பொருத்தமானது. குறைவான ஓவர்கள் இருக்கும்போது அவர் தனது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தலாம். டி20 போட்டிகளில் அவர் முன்னேறியதற்கு இதுவும் ஒரு காரணம்.
சில பந்துகளை எதிர்கொண்டால், சூர்யா விளையாட்டை தலைகீழாக மாற்ற முடியும், மேலும் வட்டத்திற்குள் 5 அல்லது 4 பீல்டர்கள் இருக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர் விருப்பப்படி பவுண்டரிகளை அடிக்க முடியும். விராட் கோலியைத் தவிர, இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் அக்சர் படேல். ரவீந்திர ஜடேஜா அணியில் இருப்பதால், அக்சர் படேல் சேர்க்கப்பட்டதில் எந்த அர்த்தமும் இல்லை, மேலும் இந்தியா ஒரு கூடுதல் சீமரைச் சேர்க்க விரும்புகிறது. அக்சர் விளையாட வேண்டும் என்றால், மீண்டும் எந்த தவறும் செய்யாத குல்தீப் யாதவை இந்தியா கைவிட வேண்டும்.
மேலும் படிக்க | IPL Ticket Booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ