ஷேன் வார்ன் இறந்தது எப்படி? மருத்துவர்கள் தகவல்!

பிரேத பரிசோதனையில் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே எப்படி இறந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.     

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 7, 2022, 08:49 PM IST
  • வார்னே சமீபத்தில் மாரடைப்பால் உயிர் இழந்தார்.
  • 52 வயதில் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஷேன் வார்ன் இறந்தது எப்படி? மருத்துவர்கள் தகவல்! title=

உலகில் தலைசிறந்த பந்துவீச்சாளரான வார்னே சமீபத்தில் மாரடைப்பால் தனது 52வது வயதில் உயிரிழந்தார்.  தாய்லாந்தில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்ததாக அவரது மேனேஜர் தெரிவித்தார். வார்னே இறப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.  பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர்.  அவரின் இழப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பேர் அதிர்ச்சியாகவே இருந்தது.  மேலும் ஸ்போர்ட்ஸ் வீரருக்கு மாரடைப்பு ஏன் வருகிறது என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்தது.  

மேலும் படிக்க | சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள்: விவரித்து வருந்திய நண்பர்

வார்னேவிற்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.  ஆரம்ப விசாரணைகளில் வார்னின் மரணத்தில் முறைகேடு எதுவும் இல்லை என்று தாய்லாந்து காவல்துறை தெரிவித்தது.  ஆனாலும்  பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.  இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பதிவில், வார்ன் உடல் எடையை குறைக்கும் முடிவில் இறங்கி உள்ளதாக பதிவிட்டு இருந்தார்.  மேலும் வார்னே சமீபத்தில் தனது இதயத்தை பரிசோதனை செய்ய மருத்துவரை அணுகியதாகவும் கூறப்படுகிறது.  

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shane Warne (@shanewarne23)

warne

வார்னின் குடும்பம் தாய்லாந்து போலிசாருக்கு அவரது இதயப் பிரச்சனைகள், ஆஸ்துமா பிரச்சனைகள் மற்றும் அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் முன் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் குறித்தும் தெரிவித்திருந்தனர்.  வார்னே சமீபத்தில் தனது நண்பர்களுடன் தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள பிரபலமான கோ சாமுய் தீவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பிரேத பரிசோதனையில் வார்னேவின் இறப்பில் எந்த வித சந்தேகமும் இல்லை எனவும், இயற்கையான மரணமே என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஷேன் வார்னின் குடும்பத்திற்கு பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டது.  அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர். விரைவில் வார்னின் உடல் அவரது குடும்பத்தினருக்குத் ஒப்படைக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | வார்னேவால் இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர்? ராக்ஸ்டார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News