ரொனால்டோவுக்கு பிறகு மான்செஸ்டர் கிளப்பில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?

Highest Paid Players At Manchester: மான்செஸ்டர் யுனைடெட்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் ரொனால்டோ வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது அந்த இடத்திற்கு ஒரு புதிய வீரரின் பெயர் இடைபெற்றுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 24, 2022, 03:10 PM IST
  • மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார்.
  • அதிக சம்பளம் வாங்கும் வீரர்களின் முதல் இடத்தில் ரொனால்டோ இருந்தார்.
  • மான்செஸ்டர் யுனைடெட் அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 பேர் யார்?
ரொனால்டோவுக்கு பிறகு மான்செஸ்டர் கிளப்பில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா? title=

Highest Paid Players At  Manchester Club: கடந்த செவ்வாயன்று போர்ச்சுகல் அணியின் முக்கிய வீரர் மற்றும் மெகாஸ்டார் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்கள் கிளப்பை விட்டு உடனடியாக வெளியேறுகிறார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது. அந்த கிளப்பில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களின் முதல் இடத்தில் 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தார். உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்களில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட், ஏன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்க வேண்டும் என்ற விவதாம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. அதற்கு காரணம் சமீபத்திய தொலைக்காட்சி பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுடனான நேர்காணலில், கிளப்பில் உள்ள ஒரு சிலர் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றசாட்டி இருந்தாத். மேலும் புதிய மேலாளர் எரிக் டென் ஹாக் மீது அவருக்கு மரியாதை இல்லை எனவும் கூறப்படுகிறது. 

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அறிக்கையில், இது "புதிய சவாலுக்கான நேரம்" என்று கூறினார். "மான்செஸ்டர் யுனைடெட் உடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம். "நான் மான்செஸ்டர் யுனைடெட்டை நேசிக்கிறேன் மற்றும் ரசிகர்களையும் நேசிக்கிறேன். அது ஒருபோதும் மாறாது. இருப்பினும், நான் ஒரு புதிய ம்,முயற்சியை நோக்கித் தேடுவதற்கு இது சரியான நேரம் என்று உணர்கிறேன். எஞ்சிய எனது எதிர்காலபயணத்தில் அணிக்கு வெற்றிக்கு உழைக்க விரும்புகிறேன்" எனக் கூறினார். 

ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவதாக அறிவித்த ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, யுனைடெட் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "கிளப்பிற்கான முன்னேற்றத்திற்கும், அணியை வெற்றி பாதையில் கொண்டுசெல்ல சில செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கிளப் புதிய உரிமையாளர்களைத் தேடுகிறது. பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறுகிறார். இது உடனடியாக அமலுக்கு வரும். கிளப்பிற்காக அவரது மகத்தான பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கிறது. மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தது. 

மேலும் படிக்க: ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ... 2 போட்டிகளில் விளையாட தடை!

தற்போது அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் தற்போது கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மீது உள்ளது. எனவே மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் முக்கிய நகர்வுகள் அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

மான்செஸ்டர் யுனைடெட்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் ரொனால்டோ வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது அதிக வருமானம் ஈட்டும் அரியணையில் ஒரு புதிய பெயர் உள்ளது. 2022-2023க்கான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடும் வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 பேர் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். இவர்களுக்கு உலகில் அதிக மதிப்பு வாய்ந்த நாணயங்களில் ஒன்றான பவுண்ட் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண்ட் என்பது இந்திய மதிப்பில் 98 ரூபாய்க்கும் அதிகமாகும்.

மேலும் படிக்க: மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்!

1. டேவிட் டி கியா வாரத்திற்கு £375,000 (₹ 3,69,87,405)

2. ஜாடோன் சான்சோ - வாரத்திற்கு £350,000 (₹ 3,45,21,578)

3. ரபேல் வரனே - வாரத்திற்கு £340,000 (₹ 3,35,35,247)

4. கேசெமிரோ - வாரத்திற்கு £300,000 (₹ 2,95,89,924)

5. ஆண்டனி மார்ஷியல் - வாரத்திற்கு £250,000 (₹ 2,46,58,270)

மேலும் படிக்க: அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல? இந்திய அணியை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News