சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?

Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2024, 01:56 PM IST
  • குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று.
  • ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளும் அங்கு தகுதிபெற்றன.
  • சூப்பர் 8 சுற்றுக்கு சில முக்கிய அணிகள் தகுதிபெற வாய்ப்பே இல்லை.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா? title=

Team India Super 8 Round Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மொத்தம் 20 அணிகள் மோதின. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஒரு அணி தனது குரூப்பில் இருக்கும் மற்ற நான்கு அணிகளுடனும் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். 

அந்த வகையில், இதுவரை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் என நான்கு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மீதம் உள்ள நான்கு இடங்களை பிடிக்க பல அணிகளுக்குள் போட்டாபோட்டி இருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் குரூப் ஏ-வில் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயும், குரூப் பி-இல் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையேயும், குரூப் டி-இல் வங்கேதசம் - நெதர்லாந்து இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது.

வெளியேறும் முக்கிய அணிகள்

அதேநிலையில் இலங்கைக்கு சூப்பர் 8 சுற்றுக்கான (Super 8 Round) வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. குரூப் சி-இல் நியூசிலாந்து அணி வெளியேறும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது, ஆப்கானிஸ்தான் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும், நியூசிலாந்துக்கு வாய்ப்பு குறைவுதான். தற்போதைய சூழலில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட டெஸ்ட் அந்தஸ்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவது மிக மிக கடினம்தான்.

மேலும் படிக்க | USA vs IND: இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள்...!

அப்படியான சூழலில், சூப்பர் 8 சுற்றும் 'பெரிய அணிகள் vs கத்துக்குட்டி அணிகள்' என்ற ரீதியிலேயே இருக்கும். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், சூப்பர் 8இல் யார் யாருக்கு எப்போது மோதப் போகிறார்கள் என்பது உறுதியாகாத நிலையில், ஒரே ஒரு போட்டி மட்டும் தற்போது உறுதியாகி உள்ளது. 

திட்டமிடப்பட்ட முறை...

அதாவது, வரும் ஜூன் 24ஆம் தேதி மேற்கு இந்திய தீவின் செயின்ட் லூசியாவில் நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் (Team India), மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் (Team Australia) மோத உள்ளன. A1 - இந்தியா, A2 பாகிஸ்தான், B1 - இங்கிலாந்து, B2 - ஆஸ்திரேலியா, C1- நியூசிலாந்து, C2 - மேற்கு இந்திய தீவுகள், D1 - தென்னாப்பிரிக்கா, D2- இலங்கை என ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. 

இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் இதில் தகுதிபெற்றுவிட்டன. மீதம் உள்ள அணிகள் தகுதிபெறாவிட்டால், தகுதிபெறும் அணிகள் அந்த இடத்தை நிரப்பும். உதாரணத்திற்கு, பாகிஸ்தான் அணிக்கு பதில் அமெரிக்க அணி தகுதிபெற்றால் A2 இடத்தில் அமெரிக்கா வரும். 

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கான போட்டிகள்

அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி ஜூன் 20ஆம் தேதி அன்று பார்படாஸ் நகரில் ஆப்கானிஸ்தான் அல்லது நியூசிலாந்தை சந்திக்கும். அதேபோல், ஜூன் 22ஆம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து அணிகளில் தகுதிபெறும் ஒரு அணியுடன் மோதும். ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியாவில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதும். இந்த போட்டிகள் அனைத்தையும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நீங்கள் காணலாம். 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : சூப்பர்8 சுற்றில் இந்திய அணிக்காகவே வரும் 2 டம்மி டீம்கள்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News