ஐபிஎல் 2022 சீசனுக்கான தேதிகள் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில், ஐபிஎல் 2022 தொடர் ஏற்பாடு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் வீரர்கள் மெகா ஏலத்தை (ஐபிஎல் மெகா ஏலம் 2022) ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்துள்ளனர்.
தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை எந்த வரிசைரில் களம் இறக்குவது என கட்டமைத்து வருகின்றன. மறுபுறம் இந்த வருடத்தின் ஐபிஎல் புதிய சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். இந்த முறை மார்ச் கடைசி வாரத்தில் இருந்து ஐபிஎல் 2022 சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பிசிசிஐ மற்றும் இந்த சீசனின் ஒளிபரப்பு நிறுவனமும் போட்டி நடத்தும் தேதிகளை குறித்து பரிசீலித்து வருகின்றன.
இந்த லீக் மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என்று முன்னதாக செய்திகள் வந்தன, ஆனால் இப்போது இந்த லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டாரின் புதிய திட்டத்தை பிசிசிஐ வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல். அதாவது முன்பு திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2022 தொடர் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்.
மேலும் படிக்க: பெங்களூரு அணியின் புதிய கேப்டன்..! இவரா?
கிரிக்கெட் இணையதளமான Cricbuzz இன் அறிக்கையின்படி, லீக் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமையிலிருந்து தொடங்க வேண்டும் என்று ஒளிபரப்பாளர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக்காரணம் என்னவென்றால், வார இறுதி நாளன சனிக்கிழமை முதல் போட்டியை வைத்தால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 போட்டிகளை நடத்த முடியும். இதன் மூலம் 2 நாட்களில் 3 போட்டிகள் நடத்தி முடிக்கலாம் என திட்டம் போட்டி உள்ளனர்.
ஐபிஎல் 2022 அட்டவணையை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றை மனதில் வைத்து, இந்த லீக் மும்பை மற்றும் புனேவில் மட்டும் நடத்தப்படும்.
பிசிசிஐ வாரியம் ஏற்கனவே தனது விருப்பத்தை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்ததோடு, புனே மற்றும் மும்பையில் மொத்தம் 4 மைதானங்களை பரிந்துரைத்துள்ளது. மும்பையில் மட்டும் சர்வதேச வசதிகளுடன் 3 மைதானங்கள் உள்ளன. அதாவது வான்கடே ஸ்டேடியம், டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம், புனேவில் உள்ள மைதானம் "புனே கிரிக்கெட் ஸ்டேடியம்" ஆகும்.
மேலும் படிக்க: எனது மகன் விளையாடுவதை நான் பார்க்க மாட்டேன்: சச்சின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR