இந்த 4 வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!

இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் போன்ற வீரர்கள் ரஞ்சி கோப்பையை புறக்கணித்ததால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2024, 08:43 AM IST
  • ரஞ்சியை புறக்கணிக்கும் இந்திய வீரர்கள்.
  • பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • ஐபிஎல் போட்டிகளுக்கு தயார் ஆவதாக குற்றசாட்டு.
இந்த 4 வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!  title=

உள்நாட்டு கிரிக்கெட்டை இந்திய வீரர்கள் புறக்கணிப்பது கடுமையான தாக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கவலை எச்சரிக்கை கொடுத்துள்ளார். பிசிசிஐயின் கோரிக்கைகளை மீறி ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டியை புறக்கணித்துள்ளனர்.  இந்நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டை விட இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு சில வீரர்கள் முன்னுரிமை கொடுப்பதாக ஜெய் ஷா எச்சரித்துள்ளார். இதில் சில மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களின் தற்போதைய போக்கு குறித்து ஜெய் ஷா கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Ravichandran Ashwin: அஸ்வினுக்கு பதிலாக படிக்கல் பேட்டிங் செய்ய முடியுமா?

"தற்போது வீரர்கள் இடையே ஒரு புதிய போக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது, மேலும் இது பிசிசிஐக்கு கவலையை ஏற்படுத்துகிறது. சில வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விட ஐபிஎல்க்கு அதிக முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர், இது யாருமே எதிர்பார்க்கப்படாத ஒரு மாற்றம். உள்நாட்டு கிரிக்கெட் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக உள்ளது. இந்திய கிரிக்கெட் மீதான எங்கள் பார்வை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. இந்தியாவுக்காக விளையாட விரும்பும், இந்திய அணியில் இடம் பிடிக்க விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் தான் அணியில் இடம் பிடிக்க முடியும். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காதது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று ஜெய் ஷா கூறி உள்ளார்.

இந்த பிரச்சனை இஷான் கிஷனிடம் இருந்து ஆரம்பித்தது. இஷான் கடைசியாக 2023 நவம்பர் மாதம் இந்தியாவிற்காக விளையாடினார். உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த அவர் பின்பு ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற்றார். அதன் பிறகு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தனக்கு ஓய்வு தேவை என்றுடீ தொடரில் இருந்து விலகினார். மேலும் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஜார்கண்டிற்கான எந்த ஒரு ஆட்டத்திலும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பங்கேற்கவில்லை.  அதற்கு பதிலாக பரோடாவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் போட்டிகளுக்கு பயிற்சி பெற்று வந்தார். இது பிசிசிஐ அதிகாரிகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவரை போலவே ஷ்ரேயாஸ் ஐயரும் ரஞ்சி போட்டிகளை புறக்கணித்து வருகிறார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயில் கிரேடு பி ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் மோசமான பார்ம் காரணமாக மீதமுள்ள கடைசி மூன்று போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ரஞ்சி டிராபி சீசனின் தொடக்க ஆட்டங்களில் விளையாடினார் ஷ்ரேயாஸ் ஐயர். ஆனால் இந்த தொடரில் கடைசி லீக் போட்டியில் அவர் விளையாடவில்லை.  அதே போல, தீபக் சாஹர், கடந்த ஆண்டு விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடினார். ஆனால் அவரின் சொந்த ஊரான ராஜஸ்தான் அணிக்காக எந்த ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடவில்லை.

மேலும் படிக்க | அஸ்வின் வேண்டுமென்றே இதை செய்தார் என சரமாரியாக குற்றம்சாட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News