வார ராசிபலன்: மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

Weekly Horoscope: அக்டோபர் 17  முதல் 23 வரையிலான ராசி பலன்கள்... 12 ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2022, 07:02 AM IST
  • கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும்
  • தனுசு ராசியினருக்கு பணிச்சுமை அதிகரிக்கும்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும்
வார ராசிபலன்: மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை  title=

வார ராசிபலன்: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. அக்டோபர் 17 முதல் 23 வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். ஐப்பசி மாதத்தின் முதல் வாரமான இது அனைவருக்கும் முக்கியமானது. தீபாவளி பண்டிகை தொடங்கும் இந்த வாரத்தின் பலன்கள் இவை. சூரியனின் பெயர்ச்சியும் இன்று நடைபெற்றுள்ளது. சூரியனின் இன்றைய ராசி மாற்றம் பலருக்கும் பலவிதமான பலன்களைத் தரும். அவர் பலவீனமான ராசியில் மாறுவது பலருக்கு சிக்கலைக் கொடுக்கும் என்றாலும் அக்டோபர் 18 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைகிறார். இந்த இரண்டு பெயர்ச்சிகளும் இணைந்து பலருக்கும் வெவ்வேறு பலன்களைக் கொடுக்கும். மொத்தத்தில் இந்த வாரம் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வார ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?

மேஷம்: இந்த வாரத் தொடக்கத்தில் மனம் அலைபாயும். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களாக இருந்தாலும் பேச்சைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியத்திற்கு அதிக கவனம் கொடுக்கவும். மாணவர்களுக்கு நல்ல நேரம் இது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களின் பொறுமை குறையும். அக்டோபர் 17 முதல் பேச்சில் கவனமாக உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும். வாழ்க்கை குழப்பமாக இருக்கும்.

மிதுனம்: இந்த வாரம் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்பிக்கையும் இருக்கும். கோபம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், அது உங்கள் கையில் தான் இருக்கிறது. 

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

கடகம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் மனதில் குழப்பங்களால் நிம்மதி குறையலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்: வார தொடக்கத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். மனதில் எதிர்மறை சிந்தனைகளும் தோன்றும். மாணவர்களுக்கு உகந்த வாரம் இது. 

கன்னி: முழு நம்பிக்கையுடன் செயல்பட்டாலும் மனதில் அமைதி இருக்காது. பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் பணியிடத்தில் ஆதரவு அதிகரிக்கும். 

துலாம்: வாரத் தொடக்கத்தில் மனதில் ஏமாற்றம் ஏற்படும். மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். அக்டோபர் 19 முதல் மனதில் அமைதி நிலவும். நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | வார ராசி பலன்கள்! மேஷம் தொடங்கி 6 ராசிகளுக்கான பலன்

விருச்சிகம்: வாரத்தின் ஆரம்பமே நம்பிக்கையுடன் தொடங்கும், ஆனால் மனதில் குழப்பம் இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும்.

தனுசு: நம்பிக்கை குறையும். சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிரமங்களும் வரலாம்.

மகரம்: வாரத் தொடக்கத்தில் மன அமைதி இருக்கும். நம்பிக்கையும் இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: மனதில் கலக்கம் ஏற்படலாம். நம்பிக்கை குறைவு ஏற்படும்.  பொறுமை குறையலாம். ஆனால் பொறுமை என்பது மிகவும் அவசியமானது. 

மீனம்: நம்பிக்கையுடன் இருங்கள், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சொத்து வாங்குவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் வாரமாக இந்த வாரம் இருக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News