சனி அஸ்தமனம்: நீதிக் கடவுள் என்று அழைக்கப்படும் சனி நேற்று மாலை சரியாக 6:56 மணிக்கு கும்ப ராசியில் அஸ்தமாகிவுள்ளார். மார்ச் மாதம் வரை அஸ்தமன நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி உதயமாவார். சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். சிலருக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனியின் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானால் இன்னல்கள் ஏற்படலாம். பணம் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈகோவால் மனைவியுடன் தகராறு ஏற்படலாம். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கால்களில் வலி மற்றும் மன அழுத்ததம் ஏற்படலாம்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வேலையில் மாற்ற ஏற்படும். மனைவியுடன் தகராறு ஏற்படக்கூடும், ஆரோக்கியம் பாதிக்கும்.
மிதுனம்: சனி அஸ்தமனத்தால் நீங்கள் தூர பயணத்தை மேற்கொள்ளலாம். பணம் வரக்கூடும். நிதி ரீதியாக சிறப்பான நேரமாக அமையும். வியாபாரம் விரிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்: சனி அஸ்தமனம் கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு ஏற்படுத்தி தயாராக கூடும். மூதாதையர் சொத்துக்களால் பணம் வரவு ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊக்கமும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்லலாம். மனைவியுடன் நல்ல நேரத்தை கழிப்பீர்கள். தலைவலி பிரச்சனை ஏற்படலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெருகும். நிதி நெருக்கடி ஏற்படும். கடன் வாங்க நேரிடலாம். உத்தியோகத்தில் மன அழுத்தம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட முடியாமல் போகலாம்.
துலாம்: துலாம் ராசியினருக்கு நான்காம் மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதி சனி. குழந்தைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். மூட்டு வலி பிரச்சனை ஏற்படும்.
விருச்சகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் மன அழுத்தம் ஏற்படும். உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும், வியாபாரத்தில் லாபம் ஈட்ட கடினமாக உழைக்க நேரிடும். மனைவியுடன் வீண் தகராறு ஏற்படலாம். முதுகுவலி மற்றும் தூக்க பிரச்சனைகள் இருக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களின் அதிபதியான சனி, இந்த அஸ்தமத்தால் சுப பலன் உண்டாகும். சக ஊழியர்களுடன் பணியிடத்தில் சாதகமான உறவு இருக்கும். மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம். மனைவியுடன் மழச்சியான சூழல் ஏற்படக்கூடும். பல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
மகரம்: சனி அஸ்தமத்தால் மகர ராசிக்கு நிதி நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் தகராறு ஏற்படலாம். கண் எரிச்சல், பல்வலி ஏற்படலாம்.
கும்பம்: சனி அஸ்தமனத்தால் கும்ப ராசிகள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். கண் தொற்று ஏற்படலாம். தொழிலில் சவால்களை சந்திக்க நேரிடும். பயணத்தின் போது பண இழப்பீடு ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
மீனம்: மீன ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் சனி அஸ்தமாகிவுள்ளார். இதன் காரணமாக, தொழிலில் லாபம் குறையத் தொடங்கும். எரிச்சல் உணர்வு இருக்கும். திடீர் நிதி இழப்பு ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்களில் வலி ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ