அள்ளித்தரப்போகும் சனி பெயர்ச்சி.. 2025 வரை பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்

கடந்த 2023 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் ஆட்சி பெற்று தற்போது பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார். இந்த யோகத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2024, 04:22 PM IST
  • பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
  • நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
அள்ளித்தரப்போகும் சனி பெயர்ச்சி.. 2025 வரை பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள் title=

கடந்த 2023 ஆம் ஆண்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சனி என பலன்கள் நடைபெறும். எனை தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வரும் சனீஸ்வரன் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார். இந்த சசயோகத்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என்பது ஜோதிட நம்பிக்கை. பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் பயணம் செய்யும் போது அங்கு லக்னத்தில் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசி லக்னகாரர்களுக்கு சசயோகத்தை தரப்போகிறது. எனவே இந்த யோகத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம் (Gemini Zodiac Sign) : மிதுன ராசி 2025 ஆண்டு முடிவு வரை கிழ்ச்சிகரமானதாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நல்ல இடத்தில் நீங்கள் வேலை வாய்ப்பை பெறலாம். வெளியூர் பயணத்தை மேற்கொள்ளலாம். புதிய வேலை கிடைக்கலாம். இஷ்டப்பட்டப் படி புதிய தொழிலை தொடங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியை பெறலாம். நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 

சிம்மம் (Leo Zodiac Sign) : சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி யோகத்தால் நல்ல பலன்களை அளிக்கும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும், அதனுடன் நீங்கள் பணியிடத்தில் சில புதிய பொறுப்புகளை பெறலாம். உயர்பதவிகள் தானவே உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

விருச்சிகம் (Scorpio Zodiac Sign) : சனி பகவான் கும்ப ராசியில் இருப்பது விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பயங்கரமாக அதிகரிக்கும். அதேபோல் தற்போது அர்த்தாஷ்டம சனி என்றாலும் உங்களுக்கு அதிர்ஷ்டமே. நினைத்தது காரியம் அனைத்து ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேறும். அற்புதமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள். எதிரிகள் தொல்லை, கடன்கள் பிரச்சினைகள் தீரும். அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News