ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!

Ketu Gochar: கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2024, 07:22 PM IST
  • கேது நட்சத்திரப் பெயர்ச்சி
  • கேதுவால் பாதிப்படையப் போகும் ராசிகள்
  • எதிர்திசையில் சுற்றும் கேது கிரகம்
ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை! title=

கேது பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், கேதுவை பாவ கிரகம், நிழல் கிரகம் மற்றும் மாயை கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ராகு-கேதுவின் மோசமான நிலை வாழ்க்கையை அழிக்கிறது. ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு ராசிகளும் ஒன்றரை ஆண்டுகளில் தங்கள் ராசியை மாற்றும் கிரகங்கள். அது மட்டுமல்ல, இரண்டு கிரகங்களும் பின்னோக்கி சஞ்சரிக்கும் இயல்புடையவை. 

கடந்த ஆண்டு அக்டோபரில் ராகு மற்றும் கேது கிரகங்கள் ராசி மாற்றம் செய்தன. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து 2025 ஆம் ஆண்டில் தான் இந்த இரு கிரகங்களும் மீண்டும் ராசி மாற்றம் செய்வார்கள். தற்போது கன்னி ராசியில் இருக்கும் கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம். 

தற்போது சுவாதி நட்சத்திரத்தில் இருக்கும் கேது ஜூன் 26ம் தேதியன்று மாலை 6:13 மணிக்கு கேது பெயர்ச்சியாகி சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவார். வழக்கமாக பிற நட்சத்திரங்கள் மாறுவதைப் போல அல்லாமல் எதிர் திசையில் கேது சஞ்சரிப்பதால், அவர் சுவாதியில் இருந்து சித்திரை நட்சத்திரத்துக்குள் நுழைகிறார். கேதுவின் இந்த நட்சத்திர சஞ்சாரம், 4 ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கேது நட்சத்திர மாற்றத்தின் பாதகங்களால் பாடுபடப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

மேலும் படிக்க | குரு பகவானை வசியப்படுத்தும் வியாழக்கிழமை பரிகாரங்கள்... வழிபாடு...

மிதுனம்: கேதுவின் நட்சத்திர சஞ்சாரம் மிதுன மிதுன ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கும். வேலைகள் அதிகமாக இருப்பது சுமையாக மாறிவிடும். பணிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டாலும் அதில் வெற்றி கிடைக்காதது கவலையை அதிகரிக்கும். வேலை மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுபடுவதற்கான ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடையும். ஆனால், தற்போது நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறுக்கு கூட அதிக விலை கொடுக்க வைத்துவிடும். மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதால், புதிய வேலைகள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

கடகம்: கேது பெயர்ச்சி நடைபெறும் ஜூன் 26க்குப் பிறகு வரும் நேரம் கடக ராசிக்காரர்களுக்கு மோசமானதாக இருக்கலாம். கேதுவின் சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணப் பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் பண இழப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் பிரச்சனை இருக்காது. நட்சத்திரம் மாறும் கேதுவால் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்: கேதுவின் நட்சத்திர மாற்றம் மீன ராசியினருக்கு சாதகமாக இருக்காது. தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் சுணக்கம் ஏற்படும். பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது இல்லையெனில் மனதாங்கல்கள் அதிகரிக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News