உணவுடன் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்வீடனில் 70,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இனிப்புகளை சாப்பிடுவதை விட குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதில் பக்கவாதம், இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இதய தமனிகளில் வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகள் அடங்கும்.
ஸ்வீடனில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பங்கேற்பாளர்கள் 1997 மற்றும் 2009 க்கு இடையில் டயட் தொடர்பான கேள்வித்தாள்களை நிரப்பினர். குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள், ஜாம் அல்லது தேன் போன்ற டாப்பிங்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் அல்லது ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகள் ஆகிய மூன்று முக்கிய பொருட்களிலிருந்து எத்தனை கலோரிகள் கிடைத்தன என்பது குறித்த தகவல்கள் கோரப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான பழக்கங்களை ஆராய்ந்த பிறகு, குளிர்பானங்கள் குளிபானங்கள் குடிக்கும் பழக்கம் கொண்ட சுமார் 26,000 பேர் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின்படி, குளிர்பானம் அருந்துபவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
குளிர்பானங்களில் செறிவூட்டப்பட்ட சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டாக்டர் பல்பீர் சிங், மேக்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர், சோடாவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை. அதோடு கலோரிகள் மிக அதிகம் உள்ளன. அதே சமயம் இனிப்புகளில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு சமநிலையை வழங்குகின்றன.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு பிரச்னையாக இருக்கிறதா? அப்போ இந்த 4 விஷயங்களை செய்யாதீங்க!
குளிர்பானங்களை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் வேலை செய்யும். இந்த செயல்முறை உடலில் உள்ள நரம்புகளுக்கு வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர, குளிர்பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கின்றன. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இளைஞர்களிடையே குளிர்பானங்களை அதிகம் அருந்தும் பழக்கம் இருப்பதைக் கருத்தில் கொண்டு. குளிர்பானங்கள் குறித்த தேசிய சுகாதார ஆலோசனையை வெளியிட வேண்டும் என்று டாக்டர் சிங் பரிந்துரைக்கிறார். குளிர்பானங்களுக்குப் பதிலாக பிரெஷ்ஷான பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸ் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகளை உட்கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார். ஒரு கேன் குளிர்பானத்தில் சுமார் 12 டீஸ்பூன் சர்க்கரை உள்ளது. இது ஏற்கனவே உங்கள் தினசரி வரம்பை மீறும் அளவாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் செய்யும் மாயங்கள் பல
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ