உலகம் அழியும் நேரம் நெருங்கிவிட்டதா? அச்சுறுத்தும் 5 சமீபத்திய அறிகுறிகள்!

5 Recent Events Indicates That World Is Going To End Soon : சமீப கால நிகழ்வுகள் பல, உலகம் அழிவதை காட்டும் அறிகுறிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Dec 14, 2024, 05:54 PM IST
  • உலகம் அழிவதை காட்டும் 5 அறிகுறிகள்
  • அனைத்தும் 2024ல் நிகழ்ந்தவை
  • உலகம் ஒரு வேளை விரைவில் அழிந்து விடுமோ?
உலகம் அழியும் நேரம் நெருங்கிவிட்டதா? அச்சுறுத்தும் 5 சமீபத்திய அறிகுறிகள்! title=

5 Recent Events Indicates That World Is Going To End Soon : 2024ஆம் ஆண்டு, பலருக்கு தனிப்பட்ட ரீதியாக அவர்களை துவைத்து எடுத்த ஆண்டாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல், உலகில் நிகழ்ந்த பல நிகழ்வுகள், உலக அழிவை நாம் நெருங்கி வருவதை காண்பிப்பதாக இருப்பதாக கூறி, சிலர் அச்சப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சில நிகழ்வுகள் குறித்து நாம் இங்கு பார்ப்போம். 

ரத யாத்திரையில் சிலை கீழே விழுந்தது: 

பூரி ஜெகந்நாதர் கோயிலில் வருடா வருடம் ரத யாத்திரை நடப்பது வழக்கம். இந்த யாத்திரையில் ஜெகந்நாதர், பால பத்திரா, சுபத்திரை அம்மன் ஆகியோர் வலம் வருவர். இது, ஜெகந்நாதர் தனது உடன் பிறந்தவர்களுடன் வலம் வரும் நிகழ்ச்சியாகும்.  இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து பல  லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர். இதில் கலந்து கொள்பவர்கள், தங்களது பாவங்களை இந்த யாத்திரை கழுவுவதாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த வருட நிகழ்ந்த ரத யாத்திரையில் பலருக்கும் நெருடலை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடந்தது. இதில், பாலபத்திராவின் சிலை, அந்த தேரில் இருந்து கீழே விழுந்து விட்டது. விழுந்த சிலையை 5 பேர் தூக்கி நிறுத்தி வைத்தனர். இது, மத நம்பிக்கை இருக்கும் அனைவருக்கும் பயத்தை கிளப்பியிருக்கிறது. 

அழுத குழந்தை: 

நேபாளீல், ஒரு சிறிய குழந்தையை கடவுளாக கும்பிட்டு வருகின்றனர். இவரை, அங்குள்ளவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடவுளின் அவதாரமாக எண்ணி பூஜை செய்து வருகின்றனர். இதனால் இந்த குழந்தைக்கு குமாரி எனும் பெயரும் வந்தது. இவர் வயதுக்கு வரும் வரை, இவரை கடவுளாக பூஜிக்க அவ்வூர் மக்கள்  முடிவு செய்திருக்கின்றனர். அதன் பிறகு, இன்னொரு குழந்தைக்கு அவர் இடத்தில் கடவுளாக நியமிக்கப்பட இருக்கிறதாம். 

இந்த குழந்தையை பலர் கடவுளின் ரூபமாக பார்த்து வரும் நிலையில், இவரை சுற்றி நிகழ்ந்த சில நிகழ்வுகளும் பலருக்கு பயத்தை கிளப்பியிருக்கிறது. இவரை ஒருமுறை  ஊர்வலமாக எடுத்து சென்ற போது அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதே போல ஒரு பெரிய பூஜையின் போது இவர் அழுததாகவும் கூறப்படுகிறது. 

ஒரு சிலர், அந்த குழந்தையின் தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கும் என்று கூற, இன்னும் சிலர் பெரிய ஆபத்து வரப்போவதை உணர்த்த அந்த குழந்தை இப்படி அழுவதாக கூறி வருகின்றனர். 

2025 கணிப்புகள்: 

2025ஆம் ஆண்டு பிறக்க இருப்பதை ஒட்டி, ஜோதிடர்கள் பலர் அடுத்த ஆண்டு யாருக்கு எப்படி இருக்கும் என்பதை கணித்து வருகின்றனர். பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, அடுத்த ஆண்டு மூன்றாம் உலகப்போர் தொடங்குவதற்கான ஆரம்ப ஆண்டாக இருக்கும் என கூறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சுற்றுலாத்தலங்களாக மாறிய கோயில்:

இந்தியாவின் புனிதமான கோயில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது, கேதார்நாத். ஆனால் பலர் இதனை இப்போது ட்ரெக்கிங் செய்ய பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் இங்கேயே மது அருந்துவதாகவும், இதனை சுற்றுலாத்தலமாக மாற்றி இறைபணி செய்பவர்கள் கூட இப்போது பணம் இருந்தால்தான் அப்பணியை செய்வதாகவும் கூறப்படுகிறது. மலைக்கு மேல் இருக்கும் இந்த கோயிலின் அமைதியை பலர் வந்து மாசுபடுத்தி அதனை கெடுப்பதாக சிலர் கூறுகின்றனர். இது போன்ற காரியங்கள், கடவுளை கோபப்படுத்தும் என்றும் சிலர் எச்சரிக்கின்றனர்.

நெல்லையப்பர் தேர் சாய்ந்தது: 

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான நெல்லையப்பர் காந்திமதியம்பாள் திருக்கோயிலின் தேரோட்டம் நடைப்பெற்றது. ஆணி மாதத்தை ஒட்டி நடைப்பெற்ற இந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகப்பெறிய தேரான இதை இழுப்பதற்காக தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி, அருகில் இருக்கும் மாநிலங்களில் இருந்தும் வந்து பலர் கலந்து கொண்டனர். இதில், தேரை கயிறு கட்டி இழுக்கும் போது 3 கயிறுகள் அறுந்து தேர் சாய்ந்து விட்டது. இது, அங்கிருந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல, இந்த விஷயத்தை கேள்வி பட்டவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தியது. 

இப்படி பல்வேறு அசம்பாவிதங்கள் 2024ஆம் ஆண்டில் நடந்தேறியிருப்பதால் பலர் “உலக அழிவு ஒரு வேளை நெருங்கி விட்டதாே?” என பேசிக்கொள்கின்றனர். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News