2025-ல் ‘இந்த’ 5 ராசி கொண்டவர்களுக்கு திருமணம் ஆகலாம்!! யாருக்கு தெரியுமா?

2025 New Year Marriage Horoscope Predictions : 2025ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டில், யாருக்கெல்லாம் திருமண யோகம் பிறக்கும்? இதோ முழு விவரம்!  

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2024, 12:26 PM IST
  • 2025ல் யாருக்கெல்லாம் திருமண யோகம்?
  • இந்த 5 ராசிகளுக்கு திருமணம் நடக்கலாம்!
  • யாருக்கெல்லாம் தெரியுமா?
2025-ல் ‘இந்த’ 5 ராசி கொண்டவர்களுக்கு திருமணம் ஆகலாம்!! யாருக்கு தெரியுமா? title=

2025 New Year Marriage Horoscope Predictions : புது வருடமான 2025ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் பிறக்க இருக்கிறது. பலர், தங்களுக்கு இந்த வருடமாவது திருமணம் ஆகுமா என்று நினைத்து காத்திருக்கலாம். இந்த வருடம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திருமண யோகம் அடிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் யார் தெரியுமா? 

1.கடகம்:

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு வரும் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் திருமண யோகத்திற்கான வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில், குரு கடக ராசிக்குள் நுழைவதால் இவர்கள் வாழ்வில் அன்பான பந்தங்கள் உருவாகுமாம். அவை, காதல் அல்லது அதற்கும் நெருக்கமான பந்தங்களாக இருக்கலாம். ஒரு புதிய உறவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதங்களில், புதிய உறவுகளுக்கான சாதகமான நேரம் அமைவதால், அதற்கு நீங்கள் உங்கள் மனதை தயார் படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. இதனால் நீங்கள் அடுத்த வருடத்தில் உங்களுக்கான வாழ்க்கை துணையை கரம் பிடிக்கலாம். 

2.ரிஷபம்:

ரிஷப ராசியை கொண்டவர்களுக்கு, மே-ஆகஸ்ட் மாதத்தில் திருமண யோகம் நடைபெறுகிறது. அது மட்டுமன்றி, சுக்கிரன் மற்றும் குரு ஆகியவை காதலுக்கு சாதகமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. இதனால், இதுவரை சிங்கிளாக காதல் உறவில் இல்லாமல் இருந்தவர்கள், இந்த ஆண்டில் ஒரு நல்லுறவில் இணைய வாய்ப்புண்டு. மேற்கூறிய மாதங்களில் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உருவாவதாேடு, அந்த மாற்றத்திற்குரிய நபர் உங்களுக்கு மிக நெருக்கமானவராகவும் மாறலாம். 

3.கும்பம்:

கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை திருமணம் யோகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட அந்த 4 மாத காலங்கள், உங்கள் திருமணம் குறித்த இன்ப செய்திகள் வந்து சேரலாம். உங்களின் ராசியில், திருமண தடை விலக வியாழன் கிரகம் அனுகிரகிப்பதால் திருமணம் குறித்த முயற்சிகளில் தடை விலகும். எனவே, அடுத்த ஆண்டில் உங்கள் திருமணத்தை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

மேலும் படிக்க | 2025-ல் யாருக்கெல்லாம் லவ் செட் ஆகும்? காதல் ராசிபலனை தெரிஞ்சிக்காேங்க!

4.விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் திருமண யோகம் அடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாதங்களில், இவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மெருகேற அதிகம் வாய்ப்புள்ளதாம். மேலும், இந்த மாதங்களுக்கு இடையே அவர்கள் தங்களின் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள போகும் நபரையும் சந்திக்கலாம். திருமணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அடுத்த ஆண்டில், மேற்கூறிய நான்கு மாதங்களில் நல்ல செய்தி வந்து சேரலாம். சொல்லப்போனால், சுப காரியங்கள் மிக விரைவாகவே கைகூடி, நல்ல உறவுகளை விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் இணைக்கலாம். 

5.மீனம்:

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை திருமண யோகம் நடைபெற வாய்ப்புள்ளது. சுக்கிரன் கிரகத்தின் பார்வை இந்த ராசியின் மீது அடுத்த வருடம் பட இருப்பதால், அன்பான உறவுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அது மட்டுமன்றி அந்த உறவு உங்கள் மனதுக்கு ஏற்ற காதலை கொடுத்து உங்களை இன்னும் ஒரு படி உயர்த்த இருக்கிறது. இருப்பினும், திருமணம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 2025-ல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்!! தொழில்-தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News