கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!!

Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2024, 11:41 AM IST
  • 12ஆம் தேதி நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்!
  • கோவாவில் நடந்த கல்யாணம்..
  • ஒன்றாக கலந்து கொண்ட த்ரிஷா-விஜய்?
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!! title=

Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது 15 வருட காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விஜய்யும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில், ஒன்றாக பயணித்ததாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர், தனது பல வருட காதலரான ஆண்டனி தட்டிலை, கடந்த 12ஆம் தேதி கரம் பிடித்தார். தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி ஆகியோரின் திருமண நிகழ்வு புகைப்படங்கள்தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதை இங்கு பார்ப்போம். 

ஒன்றாக பயணித்த விஜய்-த்ரிஷா? 

கீர்த்தி சுரேஷிற்கு திரையுலகில் பல்வேறு பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர், விஜய். இவர்கள் இருவரும் பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த போது, நண்பர்களானதாக கூறப்படுகிறது. கீர்த்திக்கு, இன்னொரு நெருங்கிய தோழியாக இருக்கிறார் த்ரிஷா. கீர்த்தியின் திருமண அறிவிப்பு வெளியான போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல் ஆளாக போஸ்ட் போட்டிருந்ததும் இவர்தான். இந்த நிலையில், கோவாவில் நடைப்பெற்ற கீர்த்தி-ஆண்டனி தட்டில் திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அருகருகில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

விமான டிக்கெட் புகைப்படம்!

தற்போது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் சில போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில், அதில் அந்த விமானத்தில் பயணம் செய்யும் 6 பேரின் பெயர் பட்டியில் இடம் பெற்றிருக்கிறது. விஜய், த்ரிஷா, விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரின் பெயர் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே போல, த்ரிஷாவின் புகைப்படங்கள் சிலவும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதில் இடம் பெற்றிருக்கும் தேதிதான் இடிக்கிறது. 

இது உண்மையான டிக்கெட் தானா? அல்லது வேண்டுமென்ற வைரலாக்கப்படும் பொய்யான செய்தியா என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | விஜய்யின் த.வெ.க கட்சிக்கு ஆதரவு தெரிவித்த த்ரிஷா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

விஜய்-த்ரிஷா நெருக்கமா? 

நடிகை விஜய்யும் த்ரிஷாவும் கோலிவுட் ரசிகர்களின் மனதை பிடித்த ஆன்-ஸ்கிரீன் ஜோடிகளாக இருந்தனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. இதையடுத்துதான், கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். கடந்த செப்டம்பரில் வெளியான ‘தி கோட்’ படத்திலும் விஜய்யுடன் ‘மட்ட’ பாடலுக்கு சேர்ந்து நடனமாடியிருந்தார் த்ரிஷா.

இடையில் விஜய்யின் பிறந்தநாளுன்று அவருடன் லிஃப்டில் இருக்கும் புகைப்படத்தை இவர் பதிவிட்டிருந்தார். இது, ரசிகர்களிடையே இவர்கள் நெருக்கமாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. காரணம், விஜய் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், இவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியாேர் விஜய்யுடன் இல்லை என கூறப்படுகிறது. இதனால், திருமணம் ஆனவராக இருக்கும் விஜய், த்ரிஷாவுடன் நெருங்கி பழகி வருகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

மேலும் படிக்க | விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News