கோலிவுட் வட்டாரங்களில் சமீப நாட்களாக ஒரு செய்தி வலம் வருகிறது, அது இளையராஜாவின் பயோ பிக் பத்தி தான். தனுஷ் நடிக்க இருந்த இளையராஜாவின் பயோ பிக் படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் இளையராஜா ஒரு முக்கிய இசையமைப்பாளராக உள்ளார், இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இன்றும் இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு தனது இசையின் மூலம் சவால் விட்டு வருகிறார். சமீபத்தில் அவரது இசையில் வெளியான விடுதலை 2 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
மேலும் படிக்க | புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?
இளையராஜாவின் பயோபிக் தொடர்பான அறிவிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதில் அருண் மாதேஸ்வர் படத்தை இயக்குகிறார் என்றும், தனுஷ் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெர்குரி மூவீஸ் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
Happy birthday to the one and only @ilaiyaraaja sir. pic.twitter.com/adYPIqjc5s
— Dhanush (@dhanushkraja) June 2, 2024
ஆரம்பத்தில் கமல்ஹாசன் இந்த படத்தின் திரைக்கதையை எழுதுகிறார் என்று கூறப்பட்டது, பின்னர் அவரின் பணிச்சுமை காரணமாக இதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி வெளியேறினார். அவரின் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் இந்த ஆண்டு தொகுத்து வழங்கவில்லை. கமல்ஹாசன் வெளியேறியதால் வேறு சிலரை வைத்து இளையராஜாவின் பயோபிக் வேலைகளை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. மேலும் இளையராஜா மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வர் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர முக்கிய பிரச்சினையாக படத்தின் பட்ஜெட் இருந்துள்ளது. இந்த அனைத்தும் ஒன்றாக சேர்ந்து இளையராஜாவின் பயோபிக்கை தற்போது தள்ளி வைத்துள்ளது.
மேலும் தனுஷ் இந்த படத்திற்காக நிறைய நாட்கள் செலவு செய்ய வேண்டி உள்ளது. தற்போது தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும் பல படங்களை பிசியாக உள்ளார். தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு ராயன் படம் வெளியானது. அதனை தொடர்ந்து NEEK என்ற படத்தை இயக்கிய முடித்துள்ளார், இந்த படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்தடுத்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதில் எதுவுமே இளையராஜாவின் பயோபிக் பற்றிய தகவல்கள் இல்லை.
மேலும் படிக்க | தங்கலான் 2ஆம் பாகம் உருவாகிறது: நடிகர் விக்ரம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ