EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
EPFO Update: இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு இந்த வரம்பு உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆனது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இது மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.
இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது செயல்பாடுகளில் பல வித பெரிய சீர்திருத்தங்களை செய்ய திட்டங்களை தீட்டி வருகின்றது. இது குறித்து இபிஎஃப்ஓ சார்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சாத்தியமான சில இபிஎஃப்ஓ மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இதன்மூலம் அதிகமான மக்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்து இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனியார் துறை ஊழியர்களுக்கான மேம்பாடுகள் குறித்து அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. இவர்களுக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்தும் அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
நீண்ட காலம் பணியாற்றிய பின்னரும் பெரும்பாலான இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகை குறைவாக உள்ளது. இவர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகப்பட்ச பலன் வழங்கப்பட உள்ளது.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் தற்போது ரூ.1000 ஆக உள்ளது. இதை உயர்த்தும் திட்டம் உள்ளது. EPF இன் கீழ் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த, தொழிலாளர் அமைச்சகம் ஓய்வூதிய நிதிக்கு அதிக பங்களிப்பை வழங்க ஆலோசித்து வருகிறது.
சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்திற்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. அதில் ஓய்வூதியம் கணக்கிட தற்போதுள்ள ரூ.15,000 என்ற ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு இந்த வரம்பு உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆனது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், இது மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.
இவை வெறும் முன்மொழிவுகள்தான். இவற்றுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. எனினும், கூடிய விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்களுக்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு இபிஎஃப்ஓ -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட பரிந்துரைக்கபப்டுகின்றது.