அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்!

DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.

Written by - RK Spark | Last Updated : Dec 13, 2024, 08:31 AM IST
  • அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு .
  • ஊழியர்களுக்கு 12% வரை உயர்த்தி உள்ளனர்.
  • இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்திய மாநில அரசு! உற்சாகத்தில் ஊழியர்கள்! title=

அரசாங்க வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.  ராஜஸ்தான் அரசில் பணிபுரிபவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பஜன் லால் சர்மா தலைமையிலான மாநில அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. பஜன் லால் அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவுபெறுவதையொட்டி மாநில மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி, அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்றவர்களும் அரசின் சலுகையை பெற உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு அகவிலைப்படியை ராஜஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 5 மற்றும் 6வது ஊதிய குழுவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அமல்படுத்தப்படும். இதன் நிலுவைத் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் அதிக கோடிகளை குவிக்கும் ரயில் எது தெரியுமா? வந்தே பாரத் கிடையாது!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் 12% மற்றும் 7% கூடுதல் பணத்தை பெற உள்ளனர். ராஜஸ்தான் மாநில அரசின் துணை முதல்வரும், நிதியமைச்சருமான தியா குமாரி அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பின் காரணமாக, ஐந்தாவது ஊதியக் குழுவில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம் 443 சதவீதத்திலிருந்து 455 சதவீதமாகவும், ஆறாவது ஊதியக் குழுவில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி 239 சதவீதத்திலிருந்து 246 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என்று தியா குமாரி தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மட்டும் இன்றி ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 'அப்னோ அக்ரானி ராஜஸ்தான்' என்பதன் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வளரவும் மேம்படுத்தவும் அரசாங்கம் உதவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசின் அறிவிப்பு எப்போது?

அகவிலைப்படி உயர்வு குறித்து மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில், மத்திய அரசு எப்போது அறிவிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய அரியர் தொகையை கேட்டு வருகின்றனர், ஆனால் இதுவரை அரசு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் DA மற்றும் DR தொகையை கொடுப்பது பற்றி நரேந்திர மோடி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

தற்போது, ​​விலைவாசி உயர்ந்து வருவதால் பல தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரைவில் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 அன்று தங்கள் பட்ஜெட்டை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது, ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். எனவே இதில் தங்களுக்கு சில நல்ல செய்திகளை அரசு வழங்கும் என்று ஊழியர்கள் நம்புகிறார்கள். இந்த கூடுதல் பணத்தை அரசு வழங்க அரசு முடிவெடுத்தால், அது ஊழியர்களுக்கு நிதி உதவி செய்து, அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை காட்டுவதாக அமையும். வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த நல்ல செய்தி வருமா என்று ஊழியர்களும், ஓய்வு பெற்றவர்களும் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News