பலர் ஆரோக்கியமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள், எனவே அரிசிக்கு பதிலாக பிரட் சாப்பிட தொடங்கி உள்ளனர். அவரசமாக வேலைக்கு செல்லும் போது பிரட் மற்றும் முட்டை சேர்த்து சாப்பிடுகின்றனர். அதுவும் குறிப்பாக வெள்ளை பிரட்க்கு பதிலாக பிரவுன் நிற பிரட் தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் பிரவுன் பிரட் அதாவது கோதுமை பிரட் விரும்புவதால், சில கடைகள் ஆரோக்கியமானதாக இல்லாத போலி பிரட் விற்பனை செய்யப்படுகிறது. எனவே நீங்கள் சாப்பிடும் பிரட் உண்மையானதா, உங்கள் உடலுக்கு நல்லதா, இல்லை போலியானதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். போலியான பிரட்டை எப்படி கண்டுபிடிப்பது என்று மருத்துவர்கள் சில அறிவுரைகளை கூடுகின்றனர்.
மேலும் படிக்க | சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: சோரியாசிஸ் பாதிப்பாக இருக்கலாம்
- நீங்கள் கடையில் இருந்து பிரட் வாங்குவதற்கு முன், அதில் என்ன என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பாருங்கள். இரசாயனங்கள் அல்லது போலி நிறங்கள் போன்ற பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
- உள்ளூர் பேக்கரிகள் உங்களுக்கு நல்ல சுவையான பிரட்டை வழங்குகின்றன. நீங்கள் அவர்கள் பிரட் தயாரிக்கும் இடத்திற்கு கூட நேரடியாக சென்று வாங்கலாம்.
- உங்களால் கடையில் பிரட் வாங்க முடியவில்லை என்றால் வீட்டில் கூட தயார் செய்யலாம். இது மிகவும் ஆரோக்கியமானது. இதற்கு முழு கோதுமை மாவை பயன்படுத்தவும். சப்பாத்தி, பிரட் , கேக்குகள் போன்றவற்றை செய்ய இதைப் பயன்படுத்தலாம்.
- வெவ்வேறு வகையான பிரட் முயற்சி செய்து பாருங்கள். முழு கோதுமை தவிர, ஓட்ஸ், குயினோவா அல்லது தினை ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரட் சாப்பிட்டு பாருங்கள்.
பிரட் உடலுக்கு நல்லதா?
பிரட் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது. இது நீங்கள் முழுதாக உணர உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. பிரட் உங்கள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது, இது செரிமானத்திற்கு முக்கியமானது. கூடுதலாக, இது வலுவான தசைகளை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. பிரட் உங்கள் உடல் மெதுவாக பயன்படுத்தக்கூடிய சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. பிரட்டில் பி வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை அனைத்தும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முக்கியம். பிரட் சாப்பிடுவது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ