Tamil Nadu Weather Latest News: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழை எப்பொழுது நிற்கும் என பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இன்றைய மழை நிலவரம் குறித்து பார்ப்போம்.
10 மணி முதல் 12 மணி வரை
இன்றைய வானிலை பொறுத்தவரை மதியம் வரைக்கும் மழையின் தாக்கம் கடுமையாக இருக்கும். அதாவது 10 மணியில் இருந்து 12 மணி வரைக்கும் மழை நீடிக்கும். அதற்கு அடுத்தபடியாக மதியத்திற்கு மேல் மிதமான மழை பல்வேறு மாவட்டங்களில் தொடந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தரவுகள் காட்டுகிறது.
எங்கெங்கெல்லாம் மழையின் தாக்கம் இருக்கும்
இன்று மதியம் அதாவது 12 மணி வரைக்கும் எங்கெங்கெல்லாம் மழையின் தாக்கம் நீடிக்கும் எனப் பார்த்தால், புதூர், பண்டாளங்குடி, அருப்புக்கோட்டை, சாத்தூர், கோவில்பட்டி, கழுகுமலை, சிவகாசி, ராஜபாளையம், சிவகிரி, புளியங்குடி, திருவேங்கடம், கயத்தாறு, பசுவந்தனை, பிடாரம், குளத்தூர், வேம்பார், சாயல்குடி, புலன்கல், கமுதி, குளிப்பட்டி, முதுகளத்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று மதியம் 12 மணி வரைக்கும் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும்.
மதியம் 12 மணி வரை மழையின் தாக்கம்
ஏற்கனவே தெற்கு வங்கக்கடளில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே தென் தமிழகம் பகுதியை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகபட்சமான மழை பதிவாகி இருக்கிறது. மேலும் இன்று மதியம் 12 மணி வரைக்கும் மழையின் தாக்கம் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மீண்டும் நாளைக்கு காலையில் (சனிக்கிழமை) மழைபொழிவின் தீவிரம் அதிகரிக்கும்.
காலை 6 மணி முதல் 8 மணி வரை கனமழை
குறிப்பாக திருநெல்வேலி பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். திருவைகுண்டம், நாங்குநேரி, புலம் பகுதிகளிலும், செவ்வல், கிருஷ்ணாபுரம், அதற்கு அடுத்தபடியாக ஏரல், நாசிரத், சாத்தான்குளம் போன்ற இடங்களில் நாளை காலை 6 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் அதிக கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகத்தான் இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை
இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல ராணிப்பேட்டை மற்றும் திருச்சி போன்ற இடங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - Rain Update: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ