தமிழகத்தில் கனமழை: இந்த மாவட்டங்களுக்கு இன்றும் மஞ்சள் எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Dec 13, 2024, 07:12 AM IST
  • தமிழகத்தில் தொடரும் கனமழை.
  • அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
  • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை: இந்த மாவட்டங்களுக்கு இன்றும் மஞ்சள் எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறை! title=

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது இலங்கை அருகே தென் தமிழகம் பகுதியை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தென் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க - விலகும் சமாஜ்வாதி... அதிர்ச்சியில் எதிர்க்கட்சி கூட்டணி - காரணம் யார் தெரியுமா?

இந்த பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு?

இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு ரெட் அலர்ட் எனப்படும் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் போன்ற மற்ற இடங்களிலும், ஆரஞ்சு எச்சரிக்கை என்று அழைக்கப்படும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  ராணிப்பேட்டை மற்றும் திருச்சி போன்ற இடங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் சிறிதளவு அல்லது அதிக மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, மதுரை போன்ற சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 16-ம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் உள்பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் போன்ற சில இடங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று (13.12.2024) மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு.

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (13.12.2024) ஒரு நாள்,  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

கனமழையை முன்னிட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (13.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார்  தெரிவித்துள்ளார்.

இன்று திருவாரூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி தி சாருஸ்ரீ அறிவிப்பு

கரூரில் மழை காரணமாக இன்று (13.12.2024) ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... ஒன்றிணையும் இந்தியா கூட்டணி - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News