WATCH: சாட்டை பட சமுத்திரக்கனி போல் நிஜத்தில் ஒரு ஆசிரியர்!!

பணியிட மாற்றம் பெற்று செல்லும் ஆங்கில ஆசிரியரை எங்களை விட்டு போகாதிங்க சாரி என்று கதறும் மாணவர்கள்!!

Last Updated : Jun 21, 2018, 07:37 PM IST
WATCH: சாட்டை பட சமுத்திரக்கனி போல் நிஜத்தில் ஒரு ஆசிரியர்!! title=

பணியிட மாற்றம் பெற்று செல்லும் ஆங்கில ஆசிரியரை எங்களை விட்டு போகாதிங்க சாரி என்று கதறும் மாணவர்கள்!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் வெள்ளியகரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், ஆங்கில ஆசிரியராக இருக்கும் பகவான் என்பவருக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என நேற்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு எங்களை விட்டு போகாதீங்க சார் என கதறி அழுதனர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம் இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் விரலாக பரவி வருகிறது. 

இதையடுத்து, ஆசிரியர் பகவானுக்கு பணியிட மாதத்தை பத்து நாட்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Trending News