நடிகை திஷா பாட்னி Bikini ரகசியம் - சமூக ஊடங்களில் வீடியோ வைரல்

திஷா பாட்னி தனது உடலை அழகாவும் பிட்னசாகவும் வைத்துக்கொள்ள ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுகிறார். அவரது உடற்பயற்சி வீடியோ காண மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த முறை வெளிவந்த வீடியோவில், அவர் 80 கிலோ எடையை தோளில் சுமந்து உடற்பயற்சி செய்வதைக் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 06:27 PM IST
நடிகை திஷா பாட்னி Bikini ரகசியம் - சமூக ஊடங்களில் வீடியோ வைரல் title=

புதுடில்லி: பாலிவுட்டின் அழகு ராணி மற்றும் ஸ்டைல் ​​ஐகான் நடிகையான திஷா பாட்னியின் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோவும் வைரலாகின்றன. அவரது போட்டோ, வீடியோ எப்பொழுது வரும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறையும் அவர் ஒரு சிறப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது திஷா பாட்னியின் (Disha Patani) பிட்னஸ் ரகசியத்தை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அந்த வீடியோவில், திஷா ஒரு துணிச்சலான பெண் என்பதை காட்டுகிறார். 

திஷா பதானி 80 கிலோ எடை
திஷா பாட்னி தனது உடலை அழகாவும் பிட்னசாகவும் வைத்துக்கொள்ள ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுகிறார். அவரது உடற்பயற்சி வீடியோ காண மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த முறை வெளிவந்த வீடியோவில், அவர் 80 கிலோ எடையை தோளில் சுமந்து உடற்பயற்சி செய்வதைக் காணலாம். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.  அவரின் வீடியோவைப் பார்த்ததும் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.  அவரை பாராட்டியும் வருகின்றனர். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 

நடிகர் டைகர் ஷிராப்பின் (Tiger Shroff) சகோதரி கிருஷ்ணா ஷிராஃப் வீடியோவைப் பார்த்த பிறகு கருத்து தெரிவித்துள்ளார். "வலுவானவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், டைகர் ஷிராப்பின் தாயார் ஆயிஷா ஷிராஃப் கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இளம் நடிகர் டைகர் ஷிராஃப் "நெக்ஸ்ட் லெவல்' என்று பதிவிட்டுள்ளார். 

திஷா பதானி கடைசியாக சல்மான் கானுடன் "ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்" படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. விரைவில் திஷா நடித்த படங்கள் வெளியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகை தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News