Video: டோனியின் சிக்ஸரை பார்த்து கோலி ஷாக் ஆன தருணம்...

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலிக்கும், முன்னாள் தலைவர் டோனிக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமானது. இதனை மேலும் ஒரு முறை இன்றைய போட்டியில் கோலி நிறுபித்துள்ளனர்!

Last Updated : Jun 9, 2019, 09:56 PM IST
Video: டோனியின் சிக்ஸரை பார்த்து கோலி ஷாக் ஆன தருணம்... title=

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலிக்கும், முன்னாள் தலைவர் டோனிக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமானது. இதனை மேலும் ஒரு முறை இன்றைய போட்டியில் கோலி நிறுபித்துள்ளனர்!

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிவருகின்றன.

இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 352 ரன்கள் குவித்தது. இதற்கிடையில் ஆட்டத்தின் 48-வது ஓவரில் மகேந்திர சிங் டோனி அபார சிக்ஸ் ஒன்றை விளாசினார். அரங்கின் எல்லைக்கே பந்தை அனுப்பிய டோனியின் இந்த சிக்ஸர் கண்டு ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

ரசிகர்களுடன் சேர்த்து களத்தில் மறுமுனையில் இருந்த விராட் கோலியும் வியந்துள்ளார். கோலி வியப்பில் ஆழ்ந்த அத்தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Trending News