தூங்குபவரின் மீது ஏறிய 2 மலைப்பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ

தூங்குபவரின் மீது 2 மலைப்பாம்புகள் ஊறிச் செல்லும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2022, 09:28 PM IST
  • இன்ஸ்டாகிராமில் பாம்பு வீடியோ
  • படுக்கை மீது ஊர்ந்து செல்லும் இரட்டை பாம்புகள்
  • பயப்படும் பார்வையாளர்கள்
தூங்குபவரின் மீது ஏறிய 2 மலைப்பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ title=

பாம்பை பார்த்தாலே பல கிலோ மீட்டர்களுக்கு தரையில் கால்படாமல் ஓடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் வைரலாகியிருக்கும் வீடியோவில், ஒருவர் மீது ஒரு பாம்பல்ல.. இரண்டு பாம்புகள் ஊர்ந்து செல்கிறது. அவர் கும்பகர்ணனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். பாம்புகள் அவர் மீது ஊர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவர் கனவு உலகத்தில் விளையாடிக் கொண்டிருப்பார் போலும். பாம்பு ஊர்வது குறித்து அவரிடம் எந்த அசைவும் தெரியவில்லை.

மேலும் படிக்க | இவருக்கு வந்த சோதனைய பாருங்க: காண்டான கங்காரு, வைரலான வீடியோ

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் பாம்புகள் இரண்டும் ராட்ச அளவாக இருக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் பாம்புகள், வீட்டிற்குள் இருக்கும் மெத்தை மீது தான் ஊர்ந்து செல்கின்றன. அதனால், அவை வளர்ப்பு பாம்பாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன தான் வளர்ப்பு பாம்பாக இருந்தலாலும் பார்ப்பவர்களுக்கு நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. கடித்தால் என்ன ஆவது? என வீடியோவை பார்த்த பலரும் கமெண்டில் கதறலை வெளிப்படுத்தி வைத்திருக்கின்றனர்.  

ஒரு சிலர் தெளிவாக கமெண்ட் அடித்துள்ளனர். ஏனென்றால் எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவையாக இருப்பதில்லை. பொதுவாக எல்லோரின் மன ஓட்டத்தில் இருக்கும் எண்ணம் என்ன என்றால், பெரிய மலைப்பாம்புகளுக்கு அதிக விஷம் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த பாம்புகளைவிட அளவில் சிறியனவாக இருக்கும் பாம்புகளுக்கு அதிகளவில் விஷம் இருக்கிறது. 

கவனக்குறைவாக இருந்துவிட்டால் மரணத்தை யாரும் தடுக்க முடியாது. அதேநேரத்தில் பாம்பின் இயல்பை அறிந்து செயல்பட்டால், அவை நம்மை ஒன்று செய்யாது. இந்த வீடியோவில் இருப்பவர் நிச்சயமாக பாம்பின் இயல்பை நன்கு அறிந்தவராக இருப்பார் என்பது அவரின் நடவடிக்கையை பார்க்கும்போதே தெரிகிறது. இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளனர்.  

மேலும் படிக்க | டிராக்டரில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய மணப்பெண்: மயங்கிப்போன இணையவாசிகள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News