Viral Video Of Hungry Elephant : உருவத்தில் பெரியதாக இருந்தாலும், மனதளவில் குழந்தை போல இருக்கும் மிருகங்கள்தான் யானைகள். இவற்றிற்கும் மனிதர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதர்கள் சொல்வதை இவை கேட்கவும் செய்யும். காட்டு யானைகளும் கூட, பல சமயங்களில் கொடூரமாக நடந்து கொண்டாலும், சில சமயங்களில் சூழலை அறிந்து விலகிச்செல்லும். அப்படி, ஒரு யானை வீட்டிற்குள் புகுந்து செய்த அட்ராசிட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
#Tamilnadu: A male wild elephant entered the residential area of Therkkupalayam in #Coimbatore district. A group of guest workers residing in a rental house were cooking when they noticed the tusker's movement. pic.twitter.com/oySbxfqAk9
— Siraj Noorani (@sirajnoorani) January 19, 2025
கோயம்புத்தூரில் உள்ள தெற்குப்பாளையம் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 18ஆம் தேதி (நேற்று) இரவு, ஒரு யானை வாடகை வீட்டிற்குள் நுழைந்து அங்கிருக்கும் உணவுகளை சாப்பிட்டுள்ளது.
யானையை பார்த்ததும், சமையற்கட்டில் வேலை செய்து கொண்டிந்தவர்கள் அமைதியாகி சுவற்றுடன் சுவறாக நின்ரிருக்கின்றனர். யானையால், அந்த வாயிற்படியை தாண்டி உள்ளே நுழையமுடியவில்லை. இருப்பினும், தனது தந்தத்தை மட்டும் உள்ளே நுழைத்து சமையல் மேடை மீதிருந்த கேஸ் அடுப்பை கீழே தள்ளியிருக்கிறது. மேலும், அங்கிருந்த ரேஷன் அரிசி மூட்டையையும் எடுத்து சாப்பிட்டுள்ளது. இப்படி, மனிதர்களை போல யானை செய்திருக்கும் சம்பவம், தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | “தம்பி ஓரம் போப்பா..” வழியில் நின்ற நபரை தாேளில் தட்டிய யானை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ