Blue Aadhaar Card | மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் அட்டை எல்லோரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் அட்டை என்பதை கட்டாய ஆவணமாக வைத்திருக்கிறது மத்திய அரசு. ஒருவேளை ஆதார் அட்டை உங்களிடம் இல்லை என்றால் அரசின் மிக முக்கியமான திட்டங்களில் இருந்து நீங்கள் பயனடைய முடியாது. கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றைக் கொண்டு ஆதார் அட்டை உருவாக்கப்படுகிறது. அதனால் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்கள் விரைவாக எடுத்துக் கொள்வது அவசியம். இந்திய குடிமகன் என்பதற்கான சான்றாகவும் ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பிரத்யேகமாக நீல நிற ஆதார் அட்டை இருக்கிறது.
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. நீல ஆதார் அட்டை பால் ஆதார் என்றும் அழைக்கப்படுகிறது. நீல ஆதார் அட்டையை உருவாக்க பயோமெட்ரிக் தேவையில்லை. இந்த பால் ஆதார் குழந்தை பிறக்கும் போது பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை மூலம் உருவாக்கப்படுகிறது.
நீல ஆதார் அட்டை
நீல ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இது 12 இலக்க தனித்துவமான எண் கொண்டிருக்கும். இந்த நீல நிற ஆதார் அட்டை 5 வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆதார் அட்டை 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்குப் பிறகு, இந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இந்த நீல நிற ஆதார் அட்டையை 5 வயதுக்குப் பிறகு பயன்படுத்த முடியாது. இந்த ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படம் மட்டுமே இருக்கும்.
நீல ஆதார் அட்டை பெறுவது எப்படி?
ஆன்லைன் நீல ஆதார் அட்டையைப் பெற, நீங்கள் முதலில் UIDAI வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில், ஆதார் பதிவில் குழந்தையின் தேவையான தகவல்களை வழங்குவதோடு, பெற்றோர் தங்கள் எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செயல்முறைக்கு சேர்க்கை மையத்தை முன்பதிவு செய்ய வேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை, முகவரிச் சான்று மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்கள் இங்கே சரிபார்க்கப்படும். இதன் பிறகு, ஆதார் அட்டை 60 நாட்களுக்குள் வழங்கப்படும். அது கொடுக்கப்பட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் புதுப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ