Latest Photos Of Child Actress Yuvina Parthavi : பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியவர், யுவினா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Photos Of Child Actress Yuvina Parthavi : தமிழ் திரையுலகை பொறுத்தவரை, குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள், வளர்ந்த பின்னர் ஹீரோயினாக திரையில் தோன்றுவர். மீனா, ஷாலினி என ஆரம்பித்து, இப்போது ஹீரோயினான அனேகா வரை பலர் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். அந்த லிஸ்டில் சேர இருக்கும் இன்னொரு நடிகை, யுவினா. இவர், சில வருடங்களுக்கு முன்பு படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி வந்தார். 5 ஆண்டுகளில் மடமடவென வளர்ந்து ஹீரோயின் போல ஆகிவிட்டார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் வீரம் படத்தில் யுவினாவை, குட்டி குழந்தையாக பார்த்திருப்போம். 2013ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் அஜித்திடம், “பச்சக்குதிரை விளையாட தெரியுமா?” எனக்கேட்டு இந்த குழந்தை பிரபலமானது.
வீரம் படத்தை தொடர்ந்து அரண்மனை, கத்தி, ஜெய் ஹிந்த் 2, காக்கி சட்டை என பல படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.
யுவினா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த படம், ஸ்ட்ராபெரி. பா.விஜய் நடித்திருந்த இந்த படத்தில், இறந்து போய் ஆவியான குழந்தையாக இவர் நடித்திருப்பார்.
யுவினா, மாஸ் படத்திலும் சூர்யாவிற்கு குழந்தையாக நடித்திருந்தார். இந்த படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், யுவினாவின் முகம் இதன் மூலம் அனைவருக்கும் தெரிந்தது.
12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா படம், சமீபத்தில் வெளியானது. இதில், யுவினா சந்தானத்திற்கு குழந்தையாக நடித்திருந்தார். இப்படத்தை பார்த்தவர்கள், யுவினாவையும் கவனிக்க தவறவில்லை. அவர்களே “இந்த குழந்தையே இப்போ ரொம்ப பெரிய பொண்ணா ஆயிருச்சுப்பா..” என்று கூறிக்கொண்டனர்.
யுவினாவிற்கு தற்போது 16 வயதாகிறது. இவர், சமீபத்தில் சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு மகளாக நடித்திருந்தார். இதையடுத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
சின்ன பெண்ணாக இவரை பார்த்தவர்கள், இப்போது இவர் பார்க்க ஹீரோயின் போல உள்ளதாக கூறி வருகின்றனர். யுவினாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.