தேர்வின் போது எப்படி ஏமாற்றுவது, எப்படி காப்பி அடிப்பது என்பதில் மாணவர்கள் கைதேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். மாணவர்கள் தேர்வுகளின் போது காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு பிட் அடித்த காலம் மலையேறி விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் லெவலில், காப்பி அடிப்படுகின்றன. மத்தியபிரதேசத்தின் சமீபத்திய ஹைடெக் காப்பியடித்த வழக்கு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை உங்களுக்கு நிச்சயம் நினைவூட்டும்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இரண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வில் ஏமாற்ற, காதுகளில் மைக்ரோ சைஸ் புளூடூத் கருவிகளை பொருத்திக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
மேலும் படிக்க | இணைய வேகம் குறைவாக உள்ளதா! Wifi வேகத்தை இரட்டிபாக்க சில டிப்ஸ்!
மகாத்மா காந்தி மெமோரியல் (MGM) மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பின் கடைசி ஆண்டு தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில், தேவி அஹில்யா விஸ்வவித்யாலயாவின் (DAVV) பறக்கும் படை திங்கள்கிழமை இருவரையும் கையும் களவுமாக பிடித்தது. எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி, அரவிந்தோ மருத்துவக் கல்லூரி மற்றும் சிந்து மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 80 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இருவரும் புளூடூத் மூலம் இயங்கும் மைக்ரோஃபோன்களை காதுகளில் பொருத்திக் கொண்டு, யாரும் கவனிக்காத வகையில் அல்லது பார்க்க முடியாத வகையில், கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுத திட்டமிட்டிருந்தனர்.
DAVV துணைவேந்தர் ரேணு ஜெயின் கூறுகையில், “இந்த மைக்ரோஃபோன்கள் இரு மாணவர்களின் காதுகளிலும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். இரு மாணவர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிஏவிவி குழு முடிவெடுக்கும். எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சஞ்சய் தீட்சித் கூறுகையில், கல்லூரி நிர்வாகம் அனைத்து தகவல்களையும் டிஏவிவியுடன் பகிர்ந்து கொண்டது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தது.
மேலும் படிக்க | Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR