இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வரம் மக்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியாக திகழ்ந்த டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் 2002 முதல் 2007-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் மாணவர்களிடம் அதிக அன்பு கொண்டவர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள கோவில் ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில்,
So fantastic to see this. Dr APJ Abdul Kalam's statue carved in a temple in Rameshwaram, Tamil Nadu.
A true hero and an inspiration for all. pic.twitter.com/XWwSxKJUhq— Mohammad Kaif (@MohammadKaif) July 18, 2018