Viral Video: லெஹங்காவில் பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ வைரல்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அதிலும், பச்சை நிற லெஹங்காவில் கலக்கலாக இருக்கும் பி.வி.சிந்து, 'லவ் ந்வான்டிடி' பாடலுக்கு துள்ளிக்குதித்து ஆடும் வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 9, 2021, 07:36 PM IST
Viral Video: லெஹங்காவில் பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ வைரல் title=

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அதிலும், பச்சை நிற லெஹங்காவில் கலக்கலாக இருக்கும் பி.வி.சிந்து, 'லவ் ந்வான்டிடி' பாடலுக்கு துள்ளிக்குதித்து ஆடும் வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 2,500 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் சிந்துவின் வீடியோ கிளிப் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் பட்டம் வென்ற நாயகி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பத்ம பூஷன் விருது பெற்றதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது போலவே, தனது நடனத்திற்காகவும் இணையத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
 

26 வயதான சிந்து, இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டில் இருக்கிறார். பச்சை நிற லெஹங்காவில், பிரபலமான பாடல்களில் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ கிளிப் 4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் 2,500 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

திங்கட்கிழமையன்று, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது சிந்துவுக்கு வழங்கப்பட்டது. டோக்கியோவில் நடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் முன்னிலையில்,  சிந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் இருந்து பத்ம விபூஷன் விருது பெற்றார்.

 

 

 

"மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்ம பூஷன் விருதைப் பெறுவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்.  இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக இந்திய அரசுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று விருது பெற்ற சிந்து தெரிவித்தார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, நவம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது.  

Also Read | ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுடா! பிளிரும் சிங்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News