இந்த மாதம் 6 நாட்களுக்கு உலகம் இருளில் மூழ்கவுள்ளதா? NASA என்ன கூறுகிறது?

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிசம்பர் மாதம் ஆறு நாட்களுக்கு பூமி இருட்டில் மூழ்கும் என்றும், சூரிய ஒளியே பூமியை எட்டாது என்றும் பல செய்திகள் பரவி வருகின்றன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2020, 05:22 PM IST
  • டிசம்பர் 16 - 22, 2020 உலகம் இருளில் மூழ்கும் என்ற செய்தி வைரல் ஆனது.
  • நிபுணர்கள் இது குறித்த உண்மையை விளக்கியுள்ளனர்.
  • இப்படி ஒரு செய்தி பரவ என்ன காரணம் என்பது தெளிவாகியுள்ளது.
இந்த மாதம் 6 நாட்களுக்கு உலகம் இருளில் மூழ்கவுள்ளதா? NASA என்ன கூறுகிறது? title=

2020 ஆம் ஆண்டு பதட்டங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்துள்ளது. கொரோனா தொற்று அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் ஆறு நாட்களுக்கு பூமி இருளில் மூழ்கும் என்ற செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிசம்பர் மாதம் ஆறு நாட்களுக்கு பூமி இருட்டில் மூழ்கும் என்றும், சூரிய ஒளியே பூமியை எட்டாது என்றும் பல செய்திகள் பரவி வருகின்றன.

இது மக்களிடையே பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு கட்டுரை, "டிசம்பர் 16 முதல் டிசம்பர் 22, 2020 வரை உலகம் இருளில் மூழ்கும்” என்று நாசா (NASA) அறிவித்தது என்று கூறியது.

எனினும் உண்மை என்னவென்றால் அப்படி எந்த அறிவிப்பையும் நாசா வெளியிடவில்லை. நாசா அத்தகைய எந்தவொரு அறிக்கையையும் வெளியிட்டதாக எந்த பதிவும் இல்லை. நாசாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த தவறான கூற்று சமீபத்திய ஆண்டுகளில் பல முறை பரப்பப்பட்டுள்ளது என்றார்.

“டிசம்பர் 2020 இல் 6 நாட்களுக்கு பூமி இருளில் மூழ்கும் என்பதை நாசா உறுதிப்படுத்துகிறது" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று ஒரு செய்தி வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. மேலும் சூரிய புயல் காரணமாக ஆறு நாட்கள் மொத்த உலகும் இருளில் மூழ்கும் என்றும் நாசா அறிவித்ததாகக் கூறப்பட்டது.

இதனால் ஏற்படும் விண்வெளி குப்பைகள் (Space Debris) சூரிய ஒளியைத் தடுக்கும் என்றும் அந்த வலைத்தளம் கூறியது. நாசாவின் முன்னாள் நிர்வாகி சார்லஸ் போல்டன், குடும்பங்களை அவசரகால தயார் நிலையில் ஈடுபட ஊக்குவிக்கும் வீடியோ கட்டுரையில் பதிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் வந்த வீடியோ என்பதும் இப்போது அப்படி எந்த வீடியோவும் வெளியிடப்படவில்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இருப்பினும், டிசம்பர் 16 – 22 பற்றி NASA அத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அனைத்து ஊடகங்களும் நிச்சயமாக அதைப் பற்றிய செய்திகளை அளித்திருக்கும். ஆனால் மற்ற எந்த ஊடகங்கமும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

எனினும் இந்த நாட்களில் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு நடக்கின்றது. சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழன் (Jupiter) மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் வரவுள்ளன.

ALSO READ: 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?

இந்த இரண்டு கிரகங்களுக்கிடையில் சீரமைப்புகள் மிகவும் அரிதானவை. இது சுமார் 20 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. ஆனால் கிரகங்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக தோன்றும் இந்த நிகழ்வு மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.” என்று டெக்சாசில் உள்ள ஹூஸ்டனில் (Houston) உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியர் பேட்ரிக் ஹார்டிகன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"டிசம்பர் 21 அன்று மாலை, இந்த இரு கிரகங்களும் இரட்டை கிரகத்தைப் போல காட்சியளிக்கும். நிலவின் விட்டத்தில் 1/5 அளவிலான இடைவெளி மட்டுமே இவற்றிற்கு இடையில் இருக்கும்” என்று ஹார்டிகன் கூறினார்.

இந்த நிகழ்வு பூமத்திய ரேகைக்கு அருகில் மிக நன்றாகத் தெரியும். எனினும் உலகின் எந்த இடத்திலிருந்தும் இந்த நிகழ்வை காண முடியும்.

மேலும், டிசம்பர் 21 அன்று விண்டர் சோல்ஸ்டைஸ் என்ற வருடாந்திர பருவ மாற்றமும் துவங்குகிறது. ஆண்டில் மிக குறைவான சூரிய ஒளி இந்த நாளிலும் ஆண்டின் இந்த சமயத்திலும் பூமியில் படுகின்றது. இதனால் இயல்பாகவே இந்த நேரத்தில் பூமி வழக்கமான ஒளியுடன் இருக்காது.

இந்த இரு வானியல் நிகழ்வுகளைத் தவிர பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வும் இந்த டிசம்பர் மாதம் நடக்கப்போவதில்லை என்பதை வானியல் நிபுணர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ALSO READ: நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News