தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையால் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது.....!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை மையம்கொண்டுள்ளது. மேலும் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தென் இந்தியா பகுதியில் சந்திக்கிறது.
இதன் காரணமாக வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யும். சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை அடுத்து 2 நாட்களுக்கு பெய்யும்.
இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை தூவும் எனவும் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.